Header Ads



''அல்லாஹ்வை, மறந்த பேச்சு''

அழிக்க முடியாத ஆட்சி அல்லாஹ்வின் ஆட்சியாகும், அவன் நாடியோருக்கு ஆட்சயைக் கொடுக்கறான், விரும்பாதவர்களுக்கு கொடுக்கமாட்டான். அதுபற்றி அல்குர்ஆன் (03/26) வசனத்தில் தெளிவுபடுத்துகின்றது.

இந்த அடிபபடையிலே நடந்து முடிந்த தேர்தலை நாம் நோக்க வேண்டும். 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் 6ஆவது ஜனாதிபதியாக மான்புமிகு மைத்திரிபால சிரிசேனா சத்தியப்பிரமாணம் செய்ததோடு பிரதம மந்திரியாக கௌரவ ரனில் விக்ரமசிங்ஹா சத்தியப்பிரமாணம் செய்தார். தேர்தல் முடிவுகளொடு பல்வேறு விடயங்கள் நிகழலாம் என வியூகிக்கப்பட்ட போதிலும், அவ்வாரோன்றும் நிகழவில்லை, அல்ஹம்துலில்லாஹ்.

மகத்தான வெற்றி:

தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்படும் வரை தன்னோடு போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதைக்கூட ஜனாதிபதியால் அறிந்துகொள்ள முடியவில்லை. இதை பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு அறிந்துகொள்ளாதது ஆச்சரியமே. பல கட்சிகள் தேர்தல் ஒன்று தேவையில்லை எனக் கூறுகையில், அதை நடத்தியே தீருவேன் எனக் கூறப்பட்ட காரணம் அறியப்படவில்லை.

சோதிடம் பொய்த்து விட்டது:

சோதிடர்கள் வழமைபோன்று ஏதோ கூறிவிட்டனர். மகிந்த ராஜபக்ஷவுக்கு சிறந்த பொருத்தமான நாளாக ஜனவரி 8ம் திகதியெனக் கூறப்படதன் பேரில் அத்திகதி தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டது. அந்தத் திகதி தனக்கு சிறந்ததென ஜனாதிபதி மஹிந்த பிடிவாதமாகவே இருந்தார். எதிர்தரப்பு வேட்பாளர் தான் சோதிடத்தை நம்புவதில்லை எனக்கூறி இருந்துவிட்டார். இறுதியாக குறித்த தினம் தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதியும் தெரிவாகிவிட்டார்.

அல்லாஹ்வை மறந்த பேச்சு:

மேலே கூறிய அல் குர்ஆன் வசனப்படியே அதிகார மாற்றம் நிகழ்ந்தது என்ற நம்பிக்கை கொண்டோர், எம்மால்தான் நாட்டின்  ஜனாதிபதியை மாற்ற முடிந்தது என்று பேசவும் எழுதவும் இணையத்தளங்கள் மூலம் செய்திகள் பரிமாறவும் செய்வது மிகவம் பிழையானதாகும். போதாக்குறைக்கு பெரும்பான்மை மக்களது மனம் வேதனைப்படும் வண்ணம் வெடி கொலுத்தி, ஆரவாரம் செய்தது, ஊர்வலங்கள் சென்றதும் அளவு மீறிய செயலாகும். அதனால் ஏற்படும் முடிவுகள் மேசமானதாக அமையும் என்பதை பற்றியே சிந்திக்காமல் நடந்து கொள்பவர்கள் மற்றோரையும் பிரச்சினைக்கு ஆலாக்குவதையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது கிடைத்த வெற்றியை இலக்கச் செய்துவிடும்.

மின்னலில் சிக்கித்தவிக்கக் கூடாது:

பொதுவாக இடி மின்னல் என்பன மழை காலங்களில் ஏற்படுவதுண்டு, சிலர் உயிராபத்தகளையும் எதிர்கொள்கின்றனர். அதைவிடவும் வாரவாரம் வரும் மின்னல் சமூகத்தையே சந்திக்கு இழுகக்கிறது. எனவே மிகவும் எச்சரிக்கையோடு மின்னல் நிகழ்ச்சியிலுருந்து ஒதுங்கியிருப்பதே பாதுகாப்பாதாகும். அதன் தயாரிப்பாளர் ஏன் முஸ்லிம் தலைவர்களை வைத்து அதிகமான நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும்? அதில் ஏன் அவர்களை மூட்டிவிட வேண்டும்? அதில் ஏன் குறிப்பிட்ட சிலரை தொடர்ந்து தாக்க வேண்டும்? தேர்தலின் பின் என்ன கேள்வி கேட்டு பிரச்சினைகள் நிகழுமோ தெரியாது. இதுபோன்றவற்றில் அரசியல் தலைமைகள் விழிப்போடு நடக்க வேண்டும்.

நல்லவை நடக்க பிரார்த்திக்க வேண்டும்:

உண்மை முஸ்லிம் எப்போதும் நல்வாழ்வுக்காய் பிரார்த்திக்க வேண்டும். கிடைத்த சந்தர்ப்பம் நழுவாமல் பார்ததுக்கொள்ள வேண்டும். பாவங்களை விட்டும் ஒதுங்கி வாழ வேண்டும். மாற்று மத சகோதரர்களோடு நல்லிணக்கமாக வாழ வேண்டும். அதன் மூலமே நல்வாழ்வு மலரும் புரிந்துணர்வு ஏற்படும்.

2 comments:

  1. My advise also avoid the Minnal programme.

    ReplyDelete
  2. yes i already comment many times to avoid the minnal and ranga he is enemy of us

    ReplyDelete

Powered by Blogger.