மஹிந்தவின் சொத்து சீசெல்ஸ் நாட்டில், சுவிஸ் வங்கிகளில் பணம் வைப்பு - விசாரணைக்கு நடவடிக்கை
-Gtn-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தினர் நெருங்கிய சகாக்கள் சீசெல்ஸ் நாட்டில் சொத்துக்களை முடக்கி வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் பிரதி பொருளாதார அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழிகளில் இந்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் கணக்காய்வாளர்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் கூட விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் ஒத்துழைப்பையும் இதற்காக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீட்கும் திட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீசெல்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக சொத்துக்களை பதுக்கி வைக்கவும் கறுப்புப் பணத்தை நிதிச் சலவை செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் பொதுமக்கள் பணத்தை திருடி சீசெல்ஸில் பதுக்கி வைக்க எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
சீசெல்ஸ் நாட்டு மக்களின் மொத்த சனத்தொகை 90000 பேர் என்ற போதிலும் கடந்த ஆண்டில் மட்டும் 3000 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல்வாதிகளும் சீசெல்ஸ் ஊடாக சுவிஸ் வங்கிகளில் சொத்துக்களை பதுக்கியிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் கொள்ளையிடப்பட்ட பணம் இவ்வாறு சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
90000 மக்கள் சனத்தொகையைக் கொண்ட சீசெல்ஸிற்கு மிஹின் எயார் விமான சேவை நேரடி விமான சேவையை கடந்த ஆண்டு ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
Govt should take action against this matter and all goods and vehicles must be sold in public auction and Govt officers and public can be given some relieves by reducing goods prices and salaries immediately otherwise all items now founding will go to another party's hand as same way and public will suffer again.My opinion is very very quick action needed here otherwise .................
ReplyDelete