Header Ads



மைத்திரிபால சிறிசேன ஒரு முஸ்லிம் விழாவுக்கும் வருவதில்லை - அஸ்வர்

மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு உணவு கிடைக்காது. அதேபோன்று 'குர்பானும்' கொடுக்க முடியாமல் போகும் எனத்தெரிவிக்கும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழில் ஒருவிதமாகவும் சிங்களத்தில் இன்னொரு விதமாகவும் மிருக வதையை ஒழிக்கும் விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்;

ரிஷாத் உட்பட சுமார் 72 ஆயிரம் முஸ்லிம்கள் கடல்மார்க்கமாக கல்பிட்டிக்கு வந்து சேர்ந்த பொழுது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தேன். மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் எதிரியாவார். நாணயத்தின் ஒரு பக்கம் பொதுபலசேனா என்றால் மறு பக்கம் மைத்திரிபால ஆகும்.

பொலனறுவையில் முஸ்லிம் அரிசி ஆலை உரிமையாளர்களை இரவோடிரவாக அவர் விரட்டியவர். முஸ்லிம்களுக்கு பொருளாதார அழிவை அவர் கொண்டு வந்தார்.

மைத்திரிபால சிறிசேன ஒரு முஸ்லிம் விழாவுக்கும்  வருவதில்லை. ஒவ்வொரு தரப்பினருடனும் வெவ்வேறுபட்ட இரகசிய ஒப்பந்தங்களை இவர் செய்துள்ளார் என்றும் கூறினார்.

10 comments:

  1. Insha allah hereafter he will come to our every occasion.sorry mr azwer sacha

    ReplyDelete
  2. ஒன்றுக்கும் முடியாமல் போன ஓநாய் ஓன்று வீதி வீதியாக புலம்பி திரியுது
    யா அல்லாஹ் இவருக்கு நல்லறிவை கொடுத்து முஸ்லிம் சமூகத்தை காட்டி கொடுக்கும் இவரின் கூட்டத்தையும் இல்லாதொளித்திடுவாயக ரஹ்மானே
    எம் முஸ்லிம் சமூகத்தை என்றும் பாது காத்திடுவாயாக ரப்பே
    மர்சூக் மன்சூர்
    தோப்பூர்

    ReplyDelete
  3. யோவ் ; மைத்ரி தவ்ஹீத்; அவர் மிலதுன்னபி; மவ்லிதிக்கு வரமாற்றார்

    ReplyDelete
  4. Aswar papa :
    Can you please stop preaching? A Muslim needs to be a true Muslim, rather expecting a Non Muslim being present in Religious functions.
    Why are you puĺling Rishad's name here- Dirty Politics??

    ReplyDelete
  5. நீங்கள் முஸ்லிமாக இருந்தால் அவர் நீங்கள் அழைக்கும் விழாவுக்கு வருவார்.

    ReplyDelete
  6. கட்டாயம் உங்கள் மையத்துக்கு வருவார்

    ReplyDelete
  7. FORGIVE ALLAH ALLAH
    RIZK GAVE ONLY MAHINDA??
    REPEAT YOUR SAHADA MR AZWER

    ReplyDelete
  8. MR Azvar Mama Neega moodiki eruko boss.......

    ReplyDelete
  9. நமது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விற்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. இனி இலங்கையில் முஸ்லிம்,தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் அமைதியாகவும் இன்ஷா அல்லாஹ் வாழ முடியும்.

    ReplyDelete
  10. நமது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விற்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. இனி இலங்கையில் முஸ்லிம்,தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் அமைதியாகவும் இன்ஷா அல்லாஹ் வாழ முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.