Header Ads



மஹிந்த ராபஜக்சவை சுற்றியிருந்த, எருமை மாட்டுக் கூட்டம் - சீலரத்ன தேரர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவை சுற்றியிருந்த எருமை மாட்டுக் கூட்டமே அவரை இல்லாமல் செய்தது என பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுற்றியிருந்தது போன்று எருமை மாட்டுக் கூட்டமொன்றை அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டாம் என புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கோருகின்றோம்.

தேர்தலில் அடைந்த வெற்றிக்காக அவருக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மஹிந்தவை சுற்றி இருந்தவர்களை எருமை மாடுகள் என குறிப்பிடுவதில் தவறில்லைää ஏனெனில் அவர்களுக்கு மக்களின் பிரச்சினைகள் தெரிந்திருக்கவில்லை.

இவ்வாறான கூட்டமொன்று ஜனாதிதிபதி மைத்திரிபாலவைச் சுற்றி இணைந்து கொள்ளக் கூடாது என பிரார்த்தனை செய்கின்றோம் என சீலதரன தேரர் தெரவித்துள்ளார்.

2 comments:

  1. சீலரத்ன தேரர் அவர்களே, நீங்கள் கூரியது உண்மைதான் ஏனெனில் எருமை மாட்டின் இயற்கையான குணம் அதுதான், முதல் செல்லும் மாடு எப்படி பயனிக்கிறதோ அதை தான் பின்னால் செல்லும் மாடும் பின்பற்றும். ஆகவே தலைமை மாடு எவ்வழியோ ஏனைய மாடுகளும் அவ்வழியே.

    எனது நண்பர்களிடம் கேட்டேன்... அப்போ எப்படி இதுகள் புலிகளை தோக்கடித்தது என்று... அதற்கு எனது நண்பன் புலி என்ன புலி.. அதுகள் சிங்கந்தையே கொள்ளும் என்று இந்த வீடியோ கிளிப்பை போட்டுக் காட்டினார்கள்.
    https://www.youtube.com/watch?v=eW4G_nWJYZA

    ReplyDelete
  2. தலைவர்கள் எப்போதும் தங்களை அதிகம் புகழ் பாடுபவர்களை தங்களுக்கு நெருக்கமானவர்களாக வைக்கவும் கூடாது தங்களை விமர்சிப்பவர்களை அதிகம் தூரமாக்கவும் கூடாது .

    ReplyDelete

Powered by Blogger.