Header Ads



கே.பி. க்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது ஜே.வி.பி.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்நாதனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஜே வீ பி இந்த மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது.

நாளைய தினம் 19-01-2015 நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதன், கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். எனினும் அவருக்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கை எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

அவர் இலங்கையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு கிளிநொச்சியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராக செயற்பட்டு வருகிறன்றார்.

ஆனால் அவரிடம் பல கப்பல்களும், தங்க நகைகளும், நூற்றுக் கணக்கான வங்கி கணக்குகள் உள்ளிட்ட பல வியாபாரங்களும் இருக்கின்றன.

இவற்றில் இருந்து மகிந்தராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் அனுகூலகங்களை அனுபவித்ததன் பின்னர், அவருக்கு சொகுசான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர். நியாயப்படி அவரிடம் உள்ள சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த நிலையிலேலேயே அவரை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க கோரி இந்த மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.