துமிந்தவுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக உண்ணாவிரதம்
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக, மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலன்னாவை சந்தியிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் தென் மாகாணசபை உறுப்பினர் பசந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள கூடாது என கோரிக்கை விடுத்து, மாத்தறை திஹகொட பிரதேச மக்கள் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஜக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் குறித்த நகரத்திலுள்ள உயரமான கட்டத்தில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதேவேளை, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் தென் மாகாணசபை உறுப்பினர் பசந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள கூடாது என கோரிக்கை விடுத்து மாகந்துர மற்றும் ஊறுபொக்க பிரதேசங்களிலும் நேற்று சனிக்கிழமை(17) எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment