Header Ads



மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் கிடைத்த, முறைப்பாடுகளை தூசுதட்ட தீர்மானம்

ஜனாதிபதி விசாரணைப் பிரிவுக்கு முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியின் போது கிடைத்த முறைப்பாடுகளில் விசாரணை நடத்தப்படாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பான ஆவணங்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி முறைப்பாடுகளில் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பந்தமான முறைப்பாடுகளும் அடங்குவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட ஊழல், மோசடிகள், இலஞ்சம் மற்றும் விலை மனுகோரல் உள்ளிட்ட விடயங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

முன்னைய அரசாங்கத்தின் அதிகாரமிக்கவர்களின் உத்தரவுக்கு அமைய விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் விசாரணை தொடர்பான கோப்புகளை மறைத்து வைத்திருந்தனர்.

பிரதேச சபைகளின் தலைவர்களே பெருமளவில் மோசடிகளை செய்துள்ளனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.