மஹரகம கபூரிய்யாவில் கல்விகற்று, மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-இக்பால் அலி-
மஹரகம கபூரிய்யா அரபிக் கல்லூரியில் கல்வி கற்று மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (28-01-2015) கல்லூரி வளாகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
மஹரகம கபூரிய்யா அரபிக் கல்லூரி நிர்வாக சபை தலைவர் அஷ்ஷெய்க் முஹம்மத் லாபிர் (கபூரி) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் விஷேட அதிதியாக கல்லூரி அதிபர் மௌலவி ஏ.ஆர்.எம்.மஃரூப் (கபூரி) அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் கல்லூரி நிர்வாக சபை உயர்மட்ட உறுப்பிணர்களும்; கல்லூரி விரிவுரையாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உயர் கல்வியினைத் தொடர பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழத்திற்கு தெரிவான அஷ்ஷெய்க் முஹம்மத் ஸப்ரான், அஷ்ஷெய்க் அஹ்மத் ரஸா, அஷ்ஷெய்க் முஹம்மத் இர்பான் ஆகியோரும் சவுதி ஆரேபியாவின் புனித மதீனாவில் அமைந்துள்ள மதீனா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழத்திற்கு தெரிவான அஷ்ஷெய்க முஹம்மத் மபாஸ், அஷ்ஷெய்க் மஹம்மத் ஹிஷாம் ஆகியோhரும் சான்றிதழும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கையின் மிகப்பிரதானமான அரபிக் கல்லூரிகளில் ஒன்றான மஹரகம கபூரிய்யாரில் கல்வி கற்ற உலமாக்கள் தேசிய சர்வதேசிய ரீதியில் இலங்கைக்கும் இம்மண்ணுக்கும் நற்பேரையும் அளப்பரிய சேவையினையும் வழங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment