Header Ads



இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு கண்டியில் வரவேற்பு

இராஜாங்க அமைச்சராகப் பதவிப் பிராப்தம் பெற்ற கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவுக்கு கண்டி முஸ்லிம்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இவ்வரவேற்பு நிகழ்வு கண்டி மீரா மக்கம் பள்ளிவாசலில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 முன்னைய அரசில் பிரதியமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தபா; ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன அவர்களது அமைச்சரவையில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நேற்று முந்தினம் நியமனம் செய்யப்பட்டார். இது குறித்தும், முன்னைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக  பேரினவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது இவர்; சமூகப் பாதுகாப்புக்காக ஆற்றிய ராஜதந்திர நகர்வுகளை மெச்சியும்,  சமூகத்தின் நன்மை கருதி மஹிந்த ராஜபக்ஷ வின் அரசில் இருந்து வெளியேறியமையைப் பாராட்டியுமே அவருக்கு மேற்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மேலும், பள்ளிவாசலில் தனது சமயக் கடமைகளை முடித்து மக்கள் சந்திப்பை நிறைவு செய்ததன் பின்னர் அவர்; அஸ்கிரிய, மற்றும் மல்வத்தை விஹாரதிபதிகளைச் சந்திக்கச் செல்வார் எனவும் தெரிய வருகின்றது.

சகலரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு எற்பாட்டுக் குழு அன்போடு அழைக்கிறது.

தகவல்- நளீர்.

No comments

Powered by Blogger.