குருநாகல் பெரிய பள்ளிவாசலின் முன், வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு
பிரான்சில் சார்லி ஹெப்டோ உள்ளிட்வர்களால் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் நையாண்டு கார்ட்டூன் எழுதி வெளியிட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் குருநாகல் பெரிய பள்ளிவாசலின் முன்னால் 30 01-2015 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையுடன் பின்னர் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர் நசார் ஹாஜியார் தெரிவித்தார்.
குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் ஜும்ஆ ஆகியவற்றுடன் இணைந்து குருநாகல் இளைஞர் அமைப்பு குருநாகல் நகரைச் சேர்ந்த பல அமைப்புக்கள் சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஒழுங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-இக்பால் அலி-
.jpg)
தயவு செய்து அல்லாஹ்வுக்காக இதனோடு சம்மந்தப்பட்டவர்களை இந்த ஆர்பாட்டம் செய்வதிலிருந்து கண்ணியமான முறையில் தடுத்து நிறுத்துங்கள். அண்மையில் இந்தப் பத்திரிக்கை நிறுவனத்தில் புகுந்து "அல்லாஹு அக்பர்" என்ற கோஷத்தோடு பத்திரிக்கை ஆசிரியர்கள் உட்பட 12 பேர் கொலை செய்யப்படும் 11 பேர் காயப்பட்டும் உள்ளனர். இதனால் பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்களும் அந்நாட்டு அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத கெடுபிடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அது மட்டுமல்ல குறித்த பத்திரிக்கை நிறுவனம் அதன் இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரத்தில் முன்னயதை விட அதிக தீவிரம் காட்டி வருகிறது..
ReplyDeleteஎதிர்வரும் வெள்ளிக் கிழமை நடக்க இருக்கின்ற இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்கிறவர்கள் இந்த நாட்டுக்கும் இந்த உலகுக்கும் குறிப்பாக அந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கும் எதனை சொல்லப்போகிறீர்கள்..?
நீங்கள் எது சொன்னாலும் அது நடைபெற்று முடிந்திருக்கும் தாக்குதலை விட பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை.. உச்ச கட்ட எதிர்ப்பு இந்த தாக்குதல் மூலம் சொல்லப்பட்டிருகிறது ..
எனவே குருநாகல் நகரில் இயல்பு நிலையை பாதித்து.. அங்கு வாழ்கின்ற சிங்கள மற்றும் ஏனைய சமூகங்களையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி இலங்கை முஸ்லிம்களை தேவை இல்லாத பிரச்சினைக்கு உட்படுத்தி விடாதீர்க.. அந்த பத்திரிகையை எந்த வகையில் எதிர்த்தாலும் அதை அவர்கள் தீவிரவாதமாகவே சித்தரிப்பார்கள்..
இதற்காக ஆர்பாட்டம் செய்வதை விட துஆ செய்வது அல்லாஹ்விடத்தில் மிகப்பொருத்தமான ஒன்றாக அமையும் இன்ஷால்லாஹ்.
அல்லாஹ் நம் அனைவரையும் சிந்தித்து அவனது திருப்பொருத்தத்தை நாடி செயற்படுபவர்களாக ஆக்குவானாக...
Well said brother
DeleteIn sri lanka we don't need such protest and this need to be stopped immediately. we will not achieve anything but only hatred from other community.
ReplyDelete