Header Ads



கல்வியில் கைவைத்த ராஜபக்ஸ ஆட்சி, குறை புள்ளிகளை பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக காண்பிப்பு

உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சில பாடங்களில் 35 புள்ளிகளுக்கும் குறைவான புள்ளிகளை பெற்ற மாணவர்களையும் கடந்த காலங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக காட்டியுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

18 முதல் 25 புள்ளிகளை பெற்றவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக காட்டி பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதத்தை அதிகரித்து போலியான தரவுகள் முன்வைக்கப்பட்டிருந்தன எனவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகளை மாணவர்களை சேர்க்கும் விடயத்தில் கால்டன் முன்பள்ளிக்கு விசேட முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

உடனடியாக அந்த முன்னுரிமையை நிறுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.