ரணிலும், பாரியாரும் பிரதமர் அலுவலகத்தில் தங்கமாட்டார்களாம்..!
இலங்கை பிரதமரின் அலுவலகம் அலரி மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் புளவர் வீதியில் செயற்பட்டு வந்தது.
எனினும் இன்று முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது அலுவலகத்தை அலரி மாளிகைக்கு மாற்றியுள்ளார்.
இன்று உத்தியோகபூர்வமாக தமது பணிகளையும் அவர் அங்கு ஆரம்பித்தார்.
எனினும் விக்கிரமசிங்கவும் அவருடைய மனைவியும் அலரி மாளிகையில் தங்கமாட்டார்கள் என்று பிரதமர் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
.jpg)
Post a Comment