Header Ads



வாழைச்சேனை கடதாசி ஆலையில், மஹிந்த ஆதரவு பொருட்கள் மீட்பு (படங்கள்)

-அனா-

வாழைச்சேனை கடதாசி ஆலையின் விடுதிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் உலர் உணவுப் பொதிகளும் பாடசாலைப் பை மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட அப்பியாசக் கொப்பிகளும் இன்று (18.01.2015) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலையியின் நிறைவேற்று அதிகாரியாக இருந்த மங்கள சி.செனரத் பாவித்த விடுதி மற்றும் அதன் அருகில் உள்ள இரண்டு விடுதிகளிலுமாக மொத்தம் மூன்று விடுதிகளில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது மக்களுக்காக வழங்குவதற்கு கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் பாடசாலை கற்றல் உபகரணங்கள் என்வற்றை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

கடதாசி ஆலையின் விடுதிகளில் தேர்தல் காலத்தின் போது வந்த உலர் உணவுப் பொதிகள் இருப்பதாக வாழைச்சேனை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹூஸைனின் பனிப்புரைக்கமைவாக விடுதிகள் ஆலையின் அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் திறந்து பார்வையிட்ட போதே இப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதிகளுக்கு வாழைச்சேனை பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் நாளை (திங்கள் கிழமை) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற அதிகாரிகளின் உதவியுடன் பொருட்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அதுவரை வாழைச்சேனை பொலிஸாரின் பாதுகாப்பிலயே குறித்த மூன்று விடுதிகளும் இருக்கும் என்றும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.