Header Ads



மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின், பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் பிடிபட்டன

-Tm-

ஜனாதிபதி மாளிகையிலிருந்த சில பொருட்கள் அடங்கிய இன்னும் இரண்டு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

பேலியகொடை-நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்விரு கொள்கலன்களிலும் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன.  

அந்த கொள்கலன்களுடன் சென்ற அதிகாரிகளிடம் இதுதொடர்பில் விசாரணை நடத்தியபோது, அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

1 comment:

  1. பிரபாகரனும் தோல்வியடைந்துவிடுவாரோ. நாட்டு மக்களை வறுமைக் கோட்டில் வாட வைத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்த மகிந்தக் குடும்பம். பிரபாகரன் தன்னைக் கெட்டவனாகவே காட்டிக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தான். ஆனால் இந்தக் குடும்பமோ நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக வெளியில் காட்டிக் கொண்டு மக்களுக்கு விலையேற்ற சுமைகளைக் கொடுத்து நன்றாக சேமித்துள்ளார்கள். சிச்சீ கேவலம். இப்பொழுது தான் எல்லாம் வெளியே வருகிறது. மகிந்தவைப் போன்றே ஒரு கடும்போக்கு ஜனாதிபதி வந்திருந்தால் எப்போதே இவர்கள் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பர். பாவம் அப்பாவி மைத்திரிபால சிறிசேனா. கொஞ்சம் விட்டுக்கொடுப்போடு செல்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.