Header Ads



நிந்தவூருக்கு நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரி கிடைப்பாரா..?

-மு.இ.உமர் அலி-

கிட்டத்தட்ட  முப்பத்தியோராயிரம்  சனத்தொகையைக்கொண்ட  நிந்தவூர் கிராமத்தில்  கடற்கரையை  அண்மித்ததாக  பிரதேச வைத்தியசாலையின்  முன்பாக  சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்  அமைந்துள்ளது.

இக்கட்டிடம்  அமைக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை  நிரந்தரமாக  எந்த ஒரு வைத்திய அதிகாரியும் நீண்ட காலமாக  சேவையில் இருக்க வில்லை,வருவார்கள் போவார்கள்  மிகக்குறுகிய காலமே  ஒவ்வொரு வைத்தியரும் கடமையாற்றிவிட்டு  சென்றிருக்கின்றனர்.

நிறுவனமொன்றின்  வளர்ச்சியும்  சிறப்பான சேவையும் அதன் தலைவரது ஆளுமையிலே தங்கி இருப்பது  நாமனைவருமறிந்த விடயமே.

வைத்தியர்கள்  தமது இடமாற்ற  விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து  சுகாதார அமைச்சுக்கு அனுப்புகையில் பதவி வெற்றிடமாக இருக்கும் நிந்தவூர்  சுகாதார வைத்திய அதிகாரி  பதவியை   தெரிவு செய்கின்றனர்,பின்னர் இடமாற்ற உத்தரவு வந்ததும்  இந்த பதவியை  பாரமெடுக்க தயங்குகின்றனர்.இதனடிப்படையில்தான் தற்பொழுது   அட்டாளைச்சேனையைச்செர்ந்த  பெண் வைத்தியர் ஒருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தும்  தான் ஏற்கனவே  வேலைசெய்யும் இடத்தில் இருந்து இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று கூறி  இங்கு கடமையை பாரமெடுக்க வராமல்  நாட்களை கடத்திக்கொண்டிருக்கின்றார்.

.இதற்குமுன்னருமொரு வைத்தியர் கல்முனை  அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலையில் இருந்து  விடுவிக்கப்படவில்லை.  இதுபோன்ற  காரணத்தால்  சில வருடங்களாக நிந்தவூர்  சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்  நிரந்தரமானதொரு பொறுப்பாளர் இன்றி அல்லோலகல்லோலப்படுகின்றது.நிந்தவூர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய  நியாயமான சேவை  பூரணமாக வழங்கப்படவில்லை.

இரண்டு  பாராளுமன்ற உருப்பினர்களிருந்தும் வருடங்களாக நீடித்துவருகின்ற இந்தப்பிரச்சினைக்குய்வர்களால் எதுவித நிரந்தர தீர்வும்கான முடியவில்ல.ஆனால்  பிற பிரதேசங்களில் உங்களுக்கென்ன இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கல்  இருகின்றனர்.ஒரு மாகாண சபை உறுப்பினர் இருக்கின்றார் என்று கூறுவார்கள்,இங்கு நடப்பனவோ எல்லாம் தலைகீழ்.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகார்  நிருவாக நடவடிக்கைகளை  செய்யும் அதேவேளை ,நிந்தவூர்  பிரதேச வைத்தியசாலையின்  அதிகாரி  கர்ப்பிணிகளுக்கான  கிளினிக்குகளை ஆங்காங்கே நடத்துகின்றார்.இவ்வாறு ஒரு சிலர் இந்தப்பிரச்சினைகளை  உடனுக்குடன் தற்காலிகமாக தீர்த்து வைப்பதனால்,நிரந்தரமான தீர்வொன்று கிடைக்காமல் இருக்கின்றது.இரண்டு  வைத்தியர்கல்பகுதிநேரமாகைந்த நிலையத்தின்  வேலைகளை பகிர்ந்து கொல்லுவதனால்  அவர்களது  சொந்த நிறுவனங்களின் கடமைகளை  சரிவர நிறைவேற்றமுடியாத நிலை  ஏற்பட வாய்ப்புண்டு.

இனியாவது  இங்கு  வர இருக்கும் வைத்திய அதிகாரி வருவாரா என்று மக்கள்  வினாத்தொடுக்கின்றனர்,இந்த விடயத்தில் பராமுகமாக  இருக்கின்ற  சம்பந்தப்பட்ட அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும்  கவனம் எடுக்கவேண்டுமென்றும் வினயமுடன் கேட்டுக்கொல்லுகின்றனர்.

1 comment:

  1. உங்கள் ஊரை சேர்ந்த வைத்தியரே சுகாதார வைத்திய அதிகாரியாக வர விரும்பாத போது எப்படி வெளி ஊர் வைத்தியர்கள் சேவை செய்ய முன்வருவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.