Header Ads



பிரான்ஸின் பத்திரிகை கார்ட்டூனை, மீண்டும் அச்சிட்ட ஜெர்மன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

சமீபத்தில் தங்களது மதத்தை விமர்சிக்கும் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதால் பிரான்சில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை கண்டிக்கும் விதமாக ஜெர்மன் பத்திரிக்கை ஒன்று அதே கார்ட்டூனை தனது பத்திரிகையில் வெளியிட்டது. இந்நிலையில் இன்று ஹம்பர்க் நகரின் வடக்கு துறைமுகப்பகுதியில் உள்ள அப்பத்திரிகை  அலுவலகத்தில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளானர்.

தாக்குதல் குறித்த முழு விவரங்கள் இன்னும் தெரியாத நிலையில் கற்களும் தீப்பற்றும் பொருட்களும் வீசப்பட்டதாகவும், கீழ்தளத்தில் உள்ள இரண்டு அறைகள் சேதமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.