Header Ads



நம்பிக்கையூட்டும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட்டின் அறிவுரைகள்..!

ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களை  குழப்பும் வகையில்  போலியான வாக்குச் சீட்டுக்களை   விநியோகிக்கும்  செயற்பாடுகள்  மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.  ஆனால் வாக்காளர்கள்    குழப்பமடையாமல்   வாக்களிப்பு நிலையத்தில் உங்களுக்கு வழங்கப்படும் உண்மையான வாக்குச் சீட்டில் உள்ள சின்னங்களை   அவதானித்து வாக்களியுங்கள் என்று     மேலதிக  தேர்தல்கள்  ஆணையாளர்  எம்.எம். மொஹம்மட் தெரிவித்தார். 

போலியான வாக்குச் சீட்டுக்களை கண்டு  ஏமாறவேண்டாம்.   உண்மையான வாக்குச் சீட்டு  தேர்தல் வாக்களிப்பின்போது அதிகாரிகளினால் வழங்கப்படும். அதில் உள்ள  சின்னங்களையும் வேட்பாளர்களின் பெயர்களையும் அடிப்படையாகக்கொண்டு வாக்களியுங்கள என்றும் அவர் குறிப்பிட்டார். 

எட்டாம் திகதி   ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.       காலை  7 மணிமுதல்  மாலை  4 மணிவரை  வாக்களிப்பு இடம்பெறும்.பாதுகாப்பு ஏற்பாடுகளும்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்கள்    எந்த சிக்கலுமின்றி வாக்களிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

நாளை எட்டாம் திகதி இடம்பெறவுள்ள   ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள்  தொடர்பில்  விபரிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இது தொடர்பில் அவர் மேலும் குறிபபிடுகையில் 

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ள வாக்காளர்களை குழப்பும் வகையில்   போலியான வாக்குச் சீட்டுக்கள்   தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுவருவதாக  எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  மேலும் குறித்த போலியான வாக்குச் சீட்டுக்களில் யானைச்சின்னமுதும் உள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏழாவது  ஜனாதிபதி தேர்தலுக்கான   வேட்பாளர்கள் மற்றும்  சின்னங்கள்   தொடர்பான விபரங்கள்   வர்த்தமானி அறிவித்தலில்  வெளியிடப்பட்டுள்ளன.     எனவே   அவற்றுக்கு மாறான முறையில் சின்னங்களோ பெயர்களோ முன்வைக்கப்பட்டு  வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டால் மக்கள்    ஏமாற்றமடையவேண்டாம். 

வாக்காளர்கள் எந்த சிக்கலுமின்றி   எட்டாம் திகதி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று  உங்கள் ஆள் அடையாளத்தை உறுதிபடுத்தி வாக்களியுங்கள்.  வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளர்களுக்கு  வாக்குச் சீட்டு வழங்கப்படும். அந்த  வாக்குச் சீட்டில் உள்ள சின்னங்களை   அவதானித்து வாக்களியுங்கள். போலியான  வாக்குச் சீட்டுக்கள் குறித்து  ஏமாற்றமடையவேண்டாம். 

இதேவேளை    ஜனாதிபதி தேர்தலில்  வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக   12316 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒரு வாக்களிப்பு நிலையத்தில்  10 அரச ஊழியர்கள்  கடமையில் ஈடுபடுவார்கள்.  இரண்டு பொலிஸார்  பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள். 

புதன்கிழமை பிற்பகல்  இரண்டு மணிக்கு   வாக்களிப்பு நிலைய  சிரேஷ்ட தலைமை அதிகாரிகளினால்     வாக்குப் பெட்டிகள்  வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.  மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரிகள் அலுவலகத்திலிருந்தே  அவை எடுத்துச் செல்லப்படும்.  அதன் பின்னர்    வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபடும் அதிகாரிகள்   வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வார்கள்.  புதன்கிழமை மாலை அங்கு   அதிகாரிகள் வாக்களிப்பு ஒத்திகை ஒன்றை  மேற்கொள்வார்கள். 

எட்டாம் திகதி வியாழக்கிழமை    காலை 6 மணிக்கு  வாக்களிப்பு நிலைய அதிகாரிகள்   தமது கடமையை ஆரம்பிப்பார்கள்.  காலை ஏழு மணிமுதல்    மாலை  4 மணிவரை  வாக்களிக்கலாம்.   எனவே  மக்கள் எந்த அச்சமுமின்றி    வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிக்கவேண்டும் என்றார். 

ஜனாதிபதி தேர்தலானது 2014 ஆம் ஆண்டு  வாக்காளர் இடாப்பின்  படி    நடைபெறும். இதன் படி  தேர்தலில் 1 கோடியே , 55 இலட்சத்து 4ஆயிரத்து 490 பேர் வாக்களிப்பதற்கு  தகுதிபெற்றுள்ளனர் . 

நாட்டின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் நேற்று முன்தினம்  திங்கட்கிழமை நள்ளிரவு   12 மணியுடன்  நிறைவடையவடைந்தன.   அந்தவகையில்   48 மணிநேர இடை வெளிக்குப் பின்னர்   நாளை  தேர்தல் வாக்களிப்பு நடைபெறும். 

 கடந்த நவம்பர் மாதம்  20 ஆம் திகதி  நாட்டின் ஏழாவது  ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால்  வெளியிடப்பட்டது.    அதன்படி டிசம்பர்  மாதம்  8 ஆம் திகதி    வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.        அந்தவகையில்  ஜனவரி எட்டாம் திகதி    தேர்தலுக்காக  19 வேட்பாளர்கள்  களமிறங்கினர்.    டிசம்பர் மாதம்  எட்டாம்  திகதி    முதல் பிரசாரப் பணிகள்  ஆரம்பமாகின.

பாதுகாப்பு கடமைகளில் நாடளாவிய ரீதியில் 12316 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களுக்கு 22 ஆயிரம் பொலிஸார்   ஈடுபடுத்தப்படவுள்ளனர். 
ஜனாதிபதி தேர்தலில் 2 இலட்சம் பேர் வரையான அரச ஊழியர்கள் மொத்தமாக   கடமையில் ஈடுபடுத்த்படவுள்ளனர்.   12000 வாக்களிப்பு நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து 75 ஆயிரம் அரச ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

கம்பஹா மாவட்டத்திலேயே  அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.  அங்கு 1637537  வாக்காளர்கள் உள்ளனர்.  குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக  வன்னி காணப்படுகின்றது. இங்கு  253058 பேர் உள்ளனர். வன்னி தேர்தல் மாவட்டமானது  முல்லைத்தீவு மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. 

1 comment:

  1. People of knowledge, will not get confused by the forged voting sheet, But What about layman, who are the majority living around rural areas?, If they are confused.. MR can disturb the such supporters of Mitrry

    ReplyDelete

Powered by Blogger.