Header Ads



‘மஹிந்தவின் வெற்றிக்கு, சிங்கள மக்களின் வாக்குகளே போதும் - சேகு இஸ்ஸதீன்

‘மஹிந்தவின் வெற்றிக்கு சிங்கள மக்களின் வாக்குகளே போதுமாக இருந்த போதிலும், முஸ்லிம்களும் மஹிந்தவுக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளிகளாக வேண்டும்’ என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் கூறினார்.

அப்துல் றஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்களின் தலைமையில் காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சேகு இஸ்ஸதீன் மேலும் கூறியதாவது,மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் போன்றோரின் முன்யோசனையற்ற, நன்றி விசுவாசமற்ற கடைசி நேர கழுத்தறுப்புக் கட்சி மாற்றம் நடுநிலையாய் இருந்த சிங்களப் பொது மக்களை மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் முடிவுக்கே தள்ளியுள்ளது.

இதனால் அண்ணளவான வெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்த மஹிந்தவை அமோக வெற்றிக்கு வீறுநடை போடச் செய்துள்ளதற்காக றவூப் ஹக்கீமுக்கும், ரிஷாட் பதியுத்தீனுக்கும் இந்த நாட்டு மக்கள் தப்புத்தண்டாக்களை தத்தெடுத்துக் கொண்டுள்ள இந்த மு.கா. மாக்காத் தலைவர்களுக்கு மன்னிப்பளித்து நன்றியும் கூற வேண்டும்.

அது மட்டும் போதாது, மஹிந்தவின் அமோக வெற்றியில் தாமும் பங்காளர்கள் என்று உரிமை கொண்டாடும் அந்தஸ்தை அடைந்து கொள்ள முஸ்லிம் கனவான்கள், புத்திஜீவிகள், இலங்கை முற்றாக வியாபார ஸ்தலங்களை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் வியாபாரிகள் நடுநிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உலமாக்கள், புரிந்துணர்வுள்ள முஸ்லிம் பொதுமக்கள், வாக்குகளுள்ள முஸ்லிம் மாணவ, மாணவியர்கள் அனைவரும் மஹிந்தவின் வெற்றியில் பங்காளியாகி இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

எதிர்வரும் மஹிந்தவின் அரசாங்கத்தில் முழு அமைச்சர் பதவி பெறப்போகின்ற உங்கள் அரசியல் தலைவர், கிழக்கின் விடிவெள்ளி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை முழு மனதோடு பின்பற்றி அவர் கரங்களையும் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றேன் என்றும் கூறினார்.

6 comments:

  1. தயவு செய்து ஜப்னா முஸ்லிம் மக்கள் ஒருமித்த கரலில் அல்லாஹ்வை நம்பி மடிவு எடுத்திரிக்கும் இத்த சந்தர்ப்பத்தில் இவர்கள் போன்ற முனாபிக்களின் அறிக்கைகளை பிரசுரிக்க வேண்டாம்

    ReplyDelete
  2. Ya SHEIGH Issadheenu:
    As a Muslim, I want you to be caring for Muslim Ummah, than pity ruppees. Giving a chance to MR& Co, will be the ultimate lost to Muslim community. They will rip off all the wealth, on the expense of all SLankans. Do you really, really want that?? Make Wudhu, pray 2 Raghah, Make Thawbaa and vote for MY3. Shukran.

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் எந்தக் கேடு கெட்டாலும் தமது வயிற்றுப் பிழைப்புக்காக மகிந்தவின் பக்கம் படர் பூசும் அரசியல் வாதிகள். சுய நலன் விரும்பிகள்.

    ReplyDelete
  4. உங்கள் ஜனாதிபதி தான் நன்றி விசுவாசம் இல்லாமல் முஸ்லிம்களுடன் நடந்தார். பொது பாலா சேனாவின் நடவடிக்கையில் உங்கள் ஜனாதிபதியின் மௌன போக்கிலாவது விளங்கவில்லையா அவர் முஸ்லிகளின் விரோதி என்று.

    ReplyDelete
  5. SIR...AS YOU GREW OLDER...YOUR BRAIN CELLS TOO GREW OLDER...I GUESS YOU LOST YOUR SENSES..MY ADVICE TO YOU IS PLEASE GO PEACEFULLY AND LEAVE US MUSLIMS ALONE...YOUR ADVICE AND GUIDANCE NOT NEEDED OR ITS ANY WORTHY OF PAYING ATTENTION

    ReplyDelete

Powered by Blogger.