ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கே தோல்வி ஏற்பட்டது
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே தோல்வி கிட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பியசேன கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்குத்தான் வெற்றி கிட்டியுள்ளது என்பதைப் போன்ற உற்சாகத்தில் காணப்பட்டனர். ஆனால் தற்போது அவர்களின் உற்சாகம் குறைந்துள்ளது.
நாங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை. சாதாரண பின்னடைவு ஒன்று மட்டுமே ஏற்பட்டது. எதிர்வரும் நாட்களில் அந்தப் பின்னடைவு சரிசெய்யப்படும்.
மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ஆகியோருடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவார். பலமிக்க கட்சியாக நாங்கள் மீண்டும் எழுந்து வருவோம்.
எங்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி பதவிக்கான முகம் மட்டும் தான் மாறியுள்ளது. தவிர எங்கள் கட்சி தோற்கடிக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தான் இந்தத் தேர்தலிலும் தோல்வி கிட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
.jpg)
குப்புற விழுந்தும் மீசையில் மண் படல்ல என்று சொல்ரீங்க வரும் ஏப்ரல் தேர்தலின் பின்பாடு உங்களுக்கெல்லாம் அந்த மீசையயே இருக்காது பாருங்க
ReplyDelete'கட்சிபேதமிருந்தாலும், கட்சி விரோத சேறுபூசும் அரசியலை விடுத்து புதிய அரசியல் மரபு ஒன்றை உருவாக்குவோம்' என்றுதானே இன்றைய இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும் உயிரைப் பணயம் வைத்து அந்த அராஜக ஆட்சியை மாற்றினார்கள்.
ReplyDeleteமன்னிக்கவேண்டும் முன்னாள் அமைச்சர் அவர்களே, இதைப்புரிந்து கொள்வதற்கும் ஆதரித்து முன்செல்வதற்கும் ஒருவருக்கு மூளை என்று அழைக்கப்படும் ஒரு அங்கமும் நல்லெண்ணம் எனும் அம்சமும் இருக்க வேண்டும்.