நிமால் சிறிபால சில்வா 'டபள் கேம்' ஆடுகின்றார் - அமைச்சர் ராஜித
எதிர்க்கட்சித் தலைவர் டபள் கேம் ஆடுகின்றார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், முன்னாள் அவைத்தலைரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிக்கும் திட்டத்தில் பங்கேற்றிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், மிக இறுதித் தருணத்தில் மீளவும் மஹிந்த ராஜபக்ஸவுடன் நிமால் சிறிபால டி சில்வா இணைந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதத்தில் எதிர்க்கட்சித் தேர்தல் மேடையில் நிமால் சிறிபால சில்வா ஏறுவதாகவும், பொதுச் செயலாளராக கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன கட்சியை விட்டு நீக்குவதனை நிராகரிப்பதாகவும் முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பிரதமர் பதவியை வழங்குவதாக நிமால் சிறிபால டி சில்வாவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்ததனைத் தொடர்ந்து இந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment