நிந்தவூர் அல் அஷ்ரக் பாடசாலை, வடிகானுக்கு மூடியிடப்போவது யார்..?
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசியபாடசாலை இவ்வூரின் கல்வியில் மிகவும் முக்கியமான ஒரு நிறுவனமாகும். இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கின்றார்கள்.
இப்பாடசாலையின் தெற்குப்புறமாக இருக்கும் கொங்கிரீட் பாதையின் ஓரமாக பாடசாலை மதிலுடன் ஒட்டியவாறு ஒரு வடிகான் உள்ளது. சுமார் முக்கால் மீட்டர் ஆழமான இவ்வடிகான் அமைக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை முன் அரைவாசிப்பாகம் மூடியிடப்படாமல் பாதுகாப்பற்று காணப்படுகின்றது.
இவ்வீதியினூடாகவே இப்பகுதியில் வசிக்கும் மக்கள்,கமக்காரர்கள் மட்டுமன்றி ,பாடசாலையின் மைதானத்திற்கு செல்பவர்களும் ஆரம்பப்பிரிவிற்காண மாணவர்களும் செல்லுகின்றனர்.
கடந்த நான்கு வருடங்களாக ஆரம்பப்பிரிவு மாணவர்கள் சேர்க்கப்படாமலிருந்தாலும்,இவ்வாண்டில் இருந்து அல் அஷ்ரக் கனிஷ்ட வித்தியாலயம் எனும் ஒரு புதிய அலகு இப்பாடசாளையுடன் இணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த மூடியற்ற வடிகானினுள் பாட சாலைச் சிறுவர்கள் தவறிவிழ வாய்ப்புண்டு,எனவேதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நிறுவனங்களும் மிகவிரைவில் இவ்வடிகானுக்கு பொருத்தமான மூடிகளை இட்டு இந்த ஆபத்தான நிலையிலிருந்து மாணவர்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Post a Comment