Header Ads



''காலம் ரொம்பவும் விசித்திரமானது''

Mabrook UL (மப்றூக்) பேஸ்புக் பக்கத்திலிருந்து...!

2009 ஆம் ஆண்டு.
மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் - நோன்பு துறக்கும் நிகழ்வொன்றுக்காக அக்கரைப்பற்று வர இருந்தார்.

மு.காங்கிரசின் தற்போதைய அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையிலான குழுவினர், ஹக்கீம் கலந்து கொள்ளும் மேற்படி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், ஹக்கீமை - அக்கரைப்பற்றுக்குள் நுழைய விடுவதில்லை என்று - அமைச்சர் அதாஉல்லா தீர்மானித்தார்.

அதனால், அக்கரைப்பற்றின் பிரதான வீதிகளில், அமைச்சர் அதாஉல்லாவின் ஆட்கள் டயர்களைப் போட்டு எரித்தார்கள், வீதிகளில் நின்று அட்டகாசம் புரிந்தார்கள். இவை அனைத்தினையும் - அக்கரைப்பற்றிலுள்ள, நீர் வழங்கல் அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியில் இருந்து கொண்டு, அமைச்சர் அதாஉல்லா வழி நடத்திக் கொண்டிருந்தார்.

நண்பகல் தாண்டிக் கொண்டிருந்தது.

ஹனீபா மதனி - அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள தனது மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் நிலையத்தில் இருந்து கொண்டிருந்தார். அப்போது, வேனில் வந்த சிலர் - திடீரென ஹனீபா மதனியின் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து, அவரை பலாத்காரமாக ஆயுத முனையில் கடத்திச் சென்றனர். 
#
நீர் வழங்கல் அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்தியத்துக்கான சுற்றுலா விடுதி.
அமைச்சர் அதாஉல்லா, விடுதிக்குள் - ஓர் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்கின்றார்.
கீழே, அமைச்சரைச் சுற்றிலும் - கிழக்கு மாகாணசபை அமைச்சர் உதுமாலெப்பை உள்ளிட்ட அதாவின் வலது - இடது கரங்கள் உட்கார்ந்திருக்கின்றார்கள்.

அப்போது, ஆயுதமுனையில் கடத்தப்பட்ட ஹனீபா மதனி, அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் அதிகாரசபைக்கு சொந்தமான சுற்றுலா விடுதிக்குக் கொண்டுவரப்பட்டு, அதாஉல்லாவின் முன்னால் நிறுத்தப்படுகிறார்.

அமைச்சர் அதாஉல்லாவைக் கண்டதும் ஹனீபா மதனி கோபப்படுகிறார்.
ஹனீபா மதனி: நீங்கள் பாரசீகப் பேரரரசர். உங்கள் சபைக்கு என்னைக் கைது செய்து கொண்டு வந்திருக்கிறீர்களோ?

அதாஉல்லா: இல்லை. நான் உங்களை கடத்தச் சொல்லவில்லை. இவனுகள் ஏதோ கோபத்தில்... அதுசரி, ரஊப் ஹக்கீமை நீங்கள்தானாமே அக்கரைப்பற்றுக்கு கூட்டி வாரீங்களாம்...
இருவருக்குமிடையில் வாக்குவாதம் தொடர்கிறது. 
#
அமைச்சர் அதாஉல்லாவிடம் ஹனீபா மதனி கடத்திச் செல்லப்பட்டபோது, ஏ.எல். தவமும் அங்கிருந்தார். அப்போது, அமைச்சர் அதாஉல்லாவின் கட்டளைகளை நிறைவேற்றுகின்றவராக - தவம் செயற்பட்டார். அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராகவும் தவம் பதவி வகித்தார். 
#
அமைச்சர் அதாஉல்லாவின் இந்த அட்டகாசம் காரணமாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு - அன்றைய தினம் அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.

நூற்றுக் கணக்கான தனது கட்சி ஆதரவாளர்களோடு, ஹக்கீம் அக்கரைப்பற்றுக்குள் நுழைய முற்பட்டபோது, அதாஉல்லாவின் ஆட்கள் - கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். இதன் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதான வீதியின் நடுவில் அமர்ந்து கொண்டு, தனது ஆதரவாளர்களுடன் - அன்றைய தினம், ஹக்கீம் நோன்பு துறந்தார்.
#
அக்கரைப்பற்றில், மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு சதித் திட்டம் தீட்டுவதற்கும், அதைச் செயற்படுத்துவதற்குமான இடமாக, நீர் வழங்கல் அபிவிருத்தி அதிகாரசபையின் சுற்றுலா விடுதியைத்தான் அமைச்சர் அதாஉல்லா பயன்படுத்தி வந்தார்.

அமைச்சர் அதாஉல்லாவின் நிழல் அரசாங்கம், இந்த சுற்றுலா விடுதியில்தான் செயற்பட்டு வந்தது. 
#
இன்று.
அதாஉல்லா - அமைச்சர் பதவியில் இல்லை.
மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் - நீர்வழங்கல் துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
நீர் வழங்கல் அதிகாரசபையின் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில், இனி - ஹக்கீம் வந்து தங்கி விட்டுச் செல்வார்.
அந்தச் சுற்றுலா விடுதிக்குள் - ஹனீபா மதனி போன்றவர்கள், இனி - அடிக்கடி சுதந்திரமாகப் போய் வருவார்கள். 
#
அப்போது, ஹனீபா மதனியை கடத்திய - அமைச்சர் அதாஉல்லாவின் கும்பலில் இருந்த தவம், இப்போது - மு.காங்கிரசில் இணைந்து, கிழக்கு மாகாணசபை உறுப்பினராகி விட்டார்.
#
அமைச்சர் அதாஉல்லா நிர்மாணித்த அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்கட்சி தலைவராக - ஹனீபா மதனி, இன்று பதவி வகிக்கிறார். 
#
அமைச்சர் உதாஉல்லாவின் நிழல் அரசாங்கம் நடந்த கோட்டையில், இனி - மு.கா.வின் கொடி பறக்கும்!
#
காலம் ரொம்பவும் விசித்திரமானது!
#

3 comments:

  1. புத்தளம் பாயிஸ் சம்மாந்துரை நௌஷாட் வெஸ்டர் றியாஸ் மயோன் முஸ்தபா இவர்களைப் பற்றிய கடந்தகால அரசியல் அநாகரிகங்களையும் எடுத்துச் சொன்னால் எதிர்கால முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு படிப்பினையாக இருக்கும்.

    ReplyDelete
  2. "" நீர் வழங்கல் அதிகாரசபையின் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில், இனி - ஹக்கீம் வந்து தங்கி விட்டுச் செல்வார்.

    அந்தச் சுற்றுலா விடுதிக்குள் - ஹனீபா மதனி போன்றவர்கள், இனி - அடிக்கடி சுதந்திரமாகப் போய் வருவார்கள். ""

    100 நாள் வேலை திட்டம் இரவு பகல் பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அதை விட்டு போட்டு ஒரு தனி மனிதனின் வெறுப்புக்கு நீங்கள் மேலே சொல்லி இருப்பது போல் நடந்தால் மக்களுக்கு இதுக்குதான உங்களுக்கு வாக்கு அழித்த

    ReplyDelete

Powered by Blogger.