ஊடகவியலாளர்கள் நாடு திரும்புகிறார்கள்
அச்சம் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறிய பல ஊடகவியலாளர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
புதிய அரசாங்கத்தினால் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் நாடு திரும்ப அக்கறை கொண்டுள்ளதாக தெரிவிக்;கப்பட்டுள்ளது.
சண்டே லீடரின் முன்னாள் ஆசிரியர் ப்டெரிக்கா ஜேன்ஸ், தெ நேசனின் உதவி ஆசிரியர் கெய்த் நோயர் ஆகியோரும் இதில் அடங்குகின்றனர்.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் ஊடக சுதந்திரம் தொடர்பான உறுதிமொழியை சர்வதேச ஊடக உரிமைக்காப்பு நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
சர்வதேச ஊடகவியலளார் சம்மேளனம், சர்வதேச ஊடக நிறுவகம் மற்றும் ஊடக சுதந்திர மையம், என்பன இந்த உறுதிமொழியை வரவேற்றுள்ளன.

Post a Comment