பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு - அசாத் சாலியின் பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது
மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலிக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் பரிந்துரைக்கு அமைய அசாத் சாலிக்கு இரண்டு பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அரசியல் கட்சியின் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு இந்த பாதுகாப்பை வழங்குமாறு தேர்தல் ஆணையாளர் பரிந்துரைத்திருந்தார்.
எவ்வாறாயினும், பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
உங்களை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்
ReplyDelete