Header Ads



கிழக்கு மாகாண முதலமைச்சரும், போட்டிபோடும் குரங்குகளும்

-ஜலீல்- 

கிழக்கு மாகாண சபையில் மு.கா மற்றும் அ.இ.ம.கா என்பன அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததை தொடர்ந்து கிழக்கு மாகாண சபை ஆட்சி மாறலாம் என்ற பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலமைச்சர் யார் என்ற விடயமே இப்போது பேசு பொருளாகியுள்ளது. 

த.தே . கூட்டமைப்புக்கு இப்போது வேண்டியதெல்லாம் வட- கிழக்கு மாகாணங்கள்  சிறுபான்மை மக்களால் ஆட்சி செய்யப்படுகிறது என்று சர்வதேசத்துக்கு காட்ட வேண்டிய தேவையே.மேலும் முதலமைச்சுப்பதவி, அமைச்சுப்பதவி என்பவற்றில் அவர்கள் அக்கறை, பேராசை கொண்டவர்கள் அல்லர் என்பதை அவர்களது கடந்த கால வரலாறுகள் காட்டி நிற்கிறது. எனவே த.தே. கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் வாய்ப்பு மிக மிக அரிது. எனவே தற்போது போட்டியிலிருப்பவர்கள் மு.கா வை சேர்ந்த ஹாபீஸ் நசீர், சம்மாந்துறையை சேர்ந்த மன்சூர், சாய்ந்தமருதை சேர்ந்த ஜெமீல் மற்றும் ஐ.தே.க வை சேர்ந்த தயா கமகே ஆவர்.

ஜெமீலை பொறுத்த வரையில் இவர் சிரேஷ்ட உறுப்பினரும், ஏற்கனவே முதலமைச்சர் பதவி தருவதாக கூறி எமாற்றப்பட்டவருமாகும். இதே வேளை தமது அரசியல் நலனுக்காக ஜெமீலுக்கு இதை வழங்குவதற்கு பா.உறுப்பினர் ஹரீஸ் கடும் எதிர்ப்பு காட்டுவதாக தெரிய வருகிறது. சாய்ந்தமருதை சேர்ந்த ஜெமிலுக்கு இதை வழங்க ஹரீஸ் க்கு விருப்பமில்லை என்பது ஏற்கனவே சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை கோரிக்கையின் மூலம் விரிவடைந்துள்ள சாய்ந்தமருது – கல்முனை இடையேயான ஊர் ஒற்றுமையை இன்னும் பாதிப்பதுடன் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கை இன்னும் வலுப்பெறும், சிராஸ் மீராசாஹிபை மேயர் பதவியிலிருந்து ஒப்பந்தப்படி இரண்டு வருடத்தின் பின் அகற்றிய போது இந்த நிலையே காணப்பட்டது. இது இச்சந்தர்ப்பத்திலும் இவருக்கு கிடைக்காவிடில் “கடல் வற்றி கருவாடு தின்ன காத்திருந்து குடல் வற்றி செத்ததாம் கொக்கு” என்ற நிலைதான் ஜெமீலுக்கு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

தயா கமகே க்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் கி.மா இல் சிறுபான்மையினருக்கு உள்ள பிரதான பிரச்சினையான காணிப்பிரச்சினையை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் முன்வைக்கவோ, தீர்க்கவோ முன்வரமாட்டார். அப்படி முன்வந்தால்,அது அவரது சிங்கள வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும் என்பது வெளிப்படை உண்மை. முதலமிச்சர் பதவியை நோக்கமாக கொண்டே கடந்த ஜனாதிபதி தேர்தலில் தயா கமகே யும் அவரது மனைவி பா. உறுப்பினர் அனோமா கமகே யும் தமது தேர்தல் பிரச்சாரங்களை முஸ்லிம் பிரதேங்களிலேயே மேற்கொண்டனர்.

ஹாபீஸ் நசீர், மற்றும் மன்சூர் ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே மகிந்த சார்பான போக்கை கடைப்பிடித்ததால்,மட்டும் இறுதி வரை தமது கிழக்கு மாகாண அமைச்சு பதவியை ராஜினமா செய்யாமலும் இருந்ததால், கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் இவர்கள் மேல் அதிருப்தி உண்டு. எனவே கிழக்கு மாகாண சபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றவர், சிரேஷ்ட உறுப்பினர், ஆரம்பத்திலேயே முதலமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டவர் என்ற வகையில்  இதில் ஜெமீலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதில் கல்முனை பா.உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் தலையிடுவது என்பது கல்முனை பிரதேசத்துக்கு கிடைக்கவுள்ள முதலமைச்சர் பதவியை இல்லாமலாக்குவதுடன், சாய்ந்தமருது மக்களின் அவருக்குரிய வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை உண்மை. மு. கா தலைவர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

4 comments:

  1. இந்த பிரதேசவாதத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் பெரியதொரு கதவடைப்பு செய்ய வேண்டும். தனிப்பட்ட நபரின் தகுதி, திறமை, மக்கள் ஆதாரவு, நேர்மைத்தன்மை, கடந்த கால நம்பகத்தன்மை, கறை படியாத கை... போன்றவற்றை கருத்தில் கொண்டு பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

    யா அல்லாஹ் இந்த பிரதேச வாதம் பேசி முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் பிரதேச வாத பித்தர்களுக்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்துவாயாக..! அமீன்.

    திவின கும சட்டமூலத்தின் பாதிப்பை ( மாகான சபைகளின் அதிகாரத்தை ஒரு பாரிய அளவில் குறைத்து. மத்திய அரசாங்கத்துக்கு ( சிங்கள அரசுக்கு ) அதிகாரத்தை கொடுக்கக் கூடிய சட்ட மூலம் ) அறிய (விளங்கிக் கொள்ள ) முடியாத ஜமீல் அவர்கள் எப்படி முதல் அமைச்சர் பதவியை முன்னெடுத்து செல்வார் என்பது கேள்விக்குறியே. திரு. ஜமீல் அவர்கள் முடிந்தால் இதற்கு Jaffna Muslim மூலம் விளக்கம் தரலாம்.

    கட்டுரையாளர் ஜலீல் அவர்களே, ஜமீல் அவர்களே ஹபீஸ் நசீருக்கு முதல் அமைச்சர் பதவியை கொடுக்கு மாறு கூறினால் தயவு செய்து ஆச்சரிய பட வேண்டாம். ஏன் TNA உறுப்பினர்களே ஹபீஸ் நசீரின் பெயரை வழிமொளிந்தாளும் ஆச்சரிய பட வேண்டாம்.

    ReplyDelete
  2. இந்த பிரதேசவாதத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் பெரியதொரு கதவடைப்பு செய்ய வேண்டும். தனிப்பட்ட நபரின் தகுதி, திறமை, மக்கள் ஆதாரவு, நேர்மைத்தன்மை, கடந்த கால நம்பகத்தன்மை, கறை படியாத கை... போன்றவற்றை கருத்தில் கொண்டு பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

    யா அல்லாஹ் இந்த பிரதேச வாதம் பேசி முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் பிரதேச வாத பித்தர்களுக்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்துவாயாக..! அமீன்.

    திவின கும சட்டமூலத்தின் பாதிப்பை ( மாகான சபைகளின் அதிகாரத்தை ஒரு பாரிய அளவில் குறைத்து. மத்திய அரசாங்கத்துக்கு ( சிங்கள அரசுக்கு ) அதிகாரத்தை கொடுக்கக் கூடிய சட்ட மூலம் ) அறிய (விளங்கிக் கொள்ள ) முடியாத ஜமீல் அவர்கள் எப்படி முதல் அமைச்சர் பதவியை முன்னெடுத்து செல்வார் என்பது கேள்விக்குறியே. திரு. ஜமீல் அவர்கள் முடிந்தால் இதற்கு Jaffna Muslim மூலம் விளக்கம் தரலாம்.

    கட்டுரையாளர் ஜலீல் அவர்களே, ஜமீல் அவர்களே ஹபீஸ் நசீருக்கு முதல் அமைச்சர் பதவியை கொடுக்கு மாறு கூறினால் தயவு செய்து ஆச்சரிய பட வேண்டாம். ஏன் TNA உறுப்பினர்களே ஹபீஸ் நசீரின் பெயரை வழிமொளிந்தாளும் ஆச்சரிய பட வேண்டாம்.

    ReplyDelete
  3. அப்படியானால் ஹரிசிக்கே முதல் அமைச்சர் பிரதி அமைச்சு எல்லாவற்றையுமே கொடுத்து விட்டால் என்ன பிரேதேச வாதத்தை உடம்பு முழுக்க பூசிக்கொண்டு ஏதேதோ பேசுகிறார்கள் இவர்கள் இஸ்லாத்துக்காக அல்லாவுக்காக எதையுமே செய்ய மாட்டார்களா என்ன ச்முகமையா இது இதற்ட்குள் இவர்கள் எஸ் எல் எம் சி யாம் ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. If they give this for Jameel we can expect some good changes in the eastern province

    ReplyDelete

Powered by Blogger.