பாராளுமன்றத்தை இன்றைக்கே கலைத்து, பாராளுமன்ற தேர்தலுக்கு எம்மால் செல்லமுடியும் - ஜனாதிபதி மைத்திரிபால
பாராளுமன்றத்தை வேண்டுமானால் இன்றைக்கே கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்ல எம்மால் முடியும். எனினும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதே எமது தலையாய கடமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்று வதற்கு நாம் அனைத்துக் கட்சியுடனும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் தமது பிரதேச மக்களால் வரவேற்பளிக்கப்பட்ட மாபெரும் நிகழ்வு நேற்றைய தினம் பொலன்னறுவை நகரில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ராஜித சேனாரட்ன.
அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு பிரதேச மக்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
பொலன்னறுவை தோப்பாவெவ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வழங்கினர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
எமக்குத் தேவையான அரசியல், பொருளாதார புரட்சியை ஏற்படுத்த எனக்குப் பாரிய பலத்தை வழங்கியது பொலன்னறுவை உட்பட எமது நாட்டு மக்களே. பொலன்னறுவை மக்களே என்னைக் கட்டியெழுப்பினர். இந்த மக்களின் வியர்வை இரத்தம் சுவாசமே என்னைப் பலப்படுத்தியது. “நீங்கள் என்னை உருவாக்கியுள்Zர்கள்”

Post a Comment