Header Ads



இருள்சூழ்ந்த, கல்முனை அரசியல் களம்

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் முக வெற்றிலை என்ற வரலாற்று புகழுடன் திழைத்துக் கொண்டிருப்பதும்  கிழக்கிலங்கையின் கிழக்கே வங்களா விரிகுடாவையும் வடக்கே பெரிய நீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லைகளாகக் கொண்ட மாபெரும் மாநகரமே கல்முனை. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கீட்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 1,06,780பேர் அடங்கிய மூவினத்தையும் சேர்ந்த பிரஜைகள் இங்கு காணப்படுகின்ற போதும் அதிகளவில் முஸ்லிம் மக்களே வசித்து வருகின்றனர் என்பது பொதுவான விடயமாகும்.

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அபிலாஷைகள் உள்ளன. அவர்களுக்கென உரிமைகள் சுதந்திரங்கள் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் ஏனைய இனங்களை போலவும் காணப்படுகின்றன. அவை பாதுகாக்கப்படவேண்டியது காலத்தின் தேவையும் அவசியமும் கூட என்ற எண்ணக்கரு தோற்றம்பெற்று தேசிய அரசியலில் பங்கேற்பதன் மூலமே அவை உறுதிப்படுத்தும் என்ற நேரியல் சிந்தனை உதயமான புனித மண் இந்த கல்முனையே. ஆம், முஸ்லிம்கள் அம்பாறையில் அதிகமாக குடியேறவேண்டும் தமக்கென்றொரு நிருவாக அலகை உருவாக்கி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து கல்முனை மையப்படுத்தி முஸ்லிம் மக்களை குடியேற்றுவதில் எம்.எஸ். காரியப்பர் முன்னின்று செயற்பட்டார். அது மட்டுமன்றி அவருடைய சிந்தனையின் பிரகாரமே இன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. 

அதன் தொடர்ச்சியாக முஸ்லிம்களின் ஏக அங்கீகாரம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் தலைசிறந்த அரசியல்வாதியுமான மறைந்த மாபெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் பிறந்த வரலாற்றுப் பெருமைமிக்க மண்ணான இந்தக் கல்முனையின் மக்கள் ஆணையே தேசிய அரசியலில் முஸ்லிம்கள் பேரம்பேசும் சக்தியை கொண்டவர்கள் என்ற செய்தியும்  பெரும்பான்மை சமூகம் உட்பட சர்வதேசத்திற்கு தெளிவான முறையில் உணர்த்தப்பட்டது. அது மட்டுமன்றி பல்வேறு கல்விமான்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள், வியாபாரிகள், என பல துறைகளிலும் முன்ணனியில் இந்த மண்ணின் மைந்தர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறு பல்வேறு வரலாற்று பதிவுகளைக் கொண்ட கல்முனை மண்ணின் தற்போதைய நிலைமை என்ன? எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்ற சிந்தனையொன்று இளைஞர் சமுகத்தினரிடையே கடந்த சில காலங்களாக கூர்ப்படைந்து வந்த போதும் தற்போது இலங்கை மத்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றத்துடன் அதனை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கல்முனை வாழ் முஸ்லிம்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் அமைப்பினராகிய நாம் கருதுகின்றோம். 

உண்மையிலேயே இந்த கருத்துக்கள் பகிரங்கமாக பதிவு செய்யப்படுவதற்கு இது உகந்த காலம் என நாம் கருதுவதோடு இது யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதையோ அல்லது வேறெவரையும் அரசியல் பிரவேசத்திற்காக சோடைபோவதற்கான நோக்கத்திலோ வரையப்படவில்லை. அவ்வாறான சிந்தனையை நாம் கொண்டிருக்கவுமில்லை. எமது இளைஞர்களின் மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும். பிரதேச வாதம் என்ற பெரும்பூதம் தலைவிரித்தாடுவது முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். 

ஒளிமயமான எதிர்காலமொன்ற உருவாகி நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக சகோதரத்துடன் வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இறைவன் மீது ஆணைiயாக இந்த கருத்துக்களை மக்களின் இளைஞர்களின் சிந்தனைக்காக முன்வைக்கின்றோம். இதுதொடர்பாக அனைவரும் ஒரு நிமிடமாவது சிந்திக்க வேண்டும். தவறுவோமாயின் நாம் எதிர்காலத்தில் அனைத்தiயும் இழந்து முஸ்லிம்களின் இதயமான கல்முனையின் துடிப்பே அடங்கிவிடும் வரலாற்றுத் துயரச் சம்பவம் நிகழ்ந்துவிடுவதற்கு சோடைபோனவர்களாக மாறிவிடுவோம். இந்த நிலைமையை சற்று உய்த்தறிந்த நாம் அதனை வெளிப்படுத்த தவறுவோமாயின் இப்பிறப்பின் ஈமானில் கூட இறைவன் மன்னிக்காத நிலை ஏற்படுத்திவிடும். எனவே  அதற்கு இடமளிக்காது  எம்மினத்தையும், புனித இஸ்லாத்தையும் பாதுகாக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். அதனடிப்படையிலேயே நாம் இவ்விடயத்தை வெளிப்படுத்துவதற்கு தலைப்பட்டுள்ளோம். 

அவ்வாறிருக்கையில், துரதிஷ்ட வசமாக மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் மறைவுச் சம்பவம் நிகழ்ந்தது. அச்சம்பவத்தின் பின்னராக இரண்டு  தசாப்தங்கள் கடந்துள்ளன. ஆனால்  தற்போதைய காலம் வரையில் கல்முனை மண்ணிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அதிகாரம் இழந்து நிற்கின்றமையானது மிகமிக கவலைக்குரியவிடயமொன்றாகும். இதனால் இவ்விடயம் இன்று பேசுபொருளாகியுள்ளது.  

ஒரு தசாப்த குடும்ப ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்து நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்படவேண்டுமென அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கைகோர்த்திருந்த தருணத்தில் மு.காவும் தனது ஆதரவை வழங்கியது. தற்போது சிறுபான்மை மக்களின் வாக்குகளின் பங்களிப்பால் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் மைத்திரிபால சிறிசேன. குறிப்பாக கல்முனை மக்களில் 90சதவீதமான மக்களின் வாக்களிப்புடன் ஆட்சிப்பீடமேறியுள்ள மைத்திரிபால சிறிசேன  தலைமையிலான அரசாங்கத்தில் கல்முனை மக்கள் பிரதிநி ஒருவருக்கு ஆகக் குறைந்தது பிரதியமைச்சுப்பதவியாவது வழங்கப்பட்டு இந்த மண்ணின் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது. இதற்கு உண்மையில் காரணம் என்ன என்பதை பலர் அறிந்து கொள்ளாது மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனைக்கு துரோகமிழைத்துவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தவண்ணமுள்ளனர்.   ஆனால் யதார்த்தம் அதுவல்ல என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

எம்.எஸ் காரிப்பர், எம்.சி. அஹமட், ஏ.ஆர். மன்சூர், எம்.எச்.எம் அஷ்ரப், என முஸ்லிம்களின் முன்மாதிரிகளாக விளங்கிய மக்கள் பிரதிநிதிகள் கல்முனை மண்ணிலிருந்தே  தெரிவு செய்யப்பட்டார்கள். எம்.எஸ்.காரியப்பர் முஸ்லிம்களின் செறிவுமிக்க பிரதேசமாக அம்பாறையை உருவாக்கியது முதல் முஸ்லிம்களின் தலைநகர கோட்டையாக கல்முனையை உருவாக்குவதில் கடுமையாக உழைத்தார். எம்.சி. அஹமட் முஸ்லிம்களை நிலையாக குடியமர்த்துவதிலும் பாதுகாப்பதிலும் முன்னோடியாக செயற்பட்டார். ஏ.ஆர்.மன்சூரின் காலம் கல்முனைக்கு பொற்காலம் என்பார்கள். அபிவிருத்தியில் கல்முனை முன்னோக்கி சென்றுகொண்டிருந்தது. வேகமான வசதிகள் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டன. இறுதியாக மாபெரும் தலைவர் அஷ்ரப் முஸ்லிம்களை தேசிய அரசியலின் பங்களாகிகளாக மாற்றினார். 

அவரின் மறைவுடன் மரத்தை சின்னாபின்னமாக்கிச் சென்றவர்களின் ஒரு சிலர் மீண்டும் மரத்தின் நிழலில் தான் தமது அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கின்றது என்பதை உணர்ந்து மீண்டும் மரத்தின் நிழலிலேயே தஞ்சமடைந்தனர். அவ்வாறான ஒருவராகவே தற்போது கல்முனை மாநகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதியாகவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் காணப்படுகின்றார். இருப்பினும் அவர் கடந்த 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாற்பதாயிரத்திற்கும் அதிமான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றவர். ஆனால் அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் மு.கா இணைந்து கொண்டவுடன் வழமையான பெரும்பான்மையின அரசாங்கங்களைப் போன்றே அந்த அரசாங்கமும் மு.காவை பிளவுபடுத்தி பலவீனமாக்கும் திருவிளையாடல்களை மெல்ல மெல்ல அரங்கேற்ற ஆரம்பித்தது. 

இதில் பல்வேறு  காய்நகர்த்தல்கள் இடம்பெற்றன. குறிப்பாக பணம், பதவி என்பன பேரம்பேசும் பொருட்களானது. அதன் அடிப்படையில் தான் குறித்த இப்பாராளுமன்ற உறுப்பினருக்கும் மகிந்த அரசாங்கத்திற்கும் இடையில் பல்வேறு தனிப்பட்ட பேச்சுக்கள் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றை மேற்கொண்டு வரும் அரசியல்வாதியொருவரின் நெறியாட்கைளுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அடிக்கடி செல்லும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மகிந்த அரசாங்கத்தின் வலைக்குள் ஏறக்குறைய சிக்குண்ட நிலையில் காணப்பட்டு பதவியை ஏற்பதற்குரிய இறுதிகட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கiயில் தலைமையில் கடுமையான உத்தரவுகளாலும் செயற்பாடுகளாலும் அதனை கைவிடவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டார். இருப்பினும் கட்சியினுள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸை யாரும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்கவுமில்லை.தலைமை உள்வீட்டு இரகசியங்களை ஒருபோதும் பகிரங்கப்படுத்தியதுமில்லை. 

அவ்வாறிருக்கையில் கல்முனை மாநகரத்தின் உட்கட்மைப்பு வசதிகளை கட்டியெழுப்பி அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய பெரும் கடமையைக் கொண்ட ஒருவராக விளங்கும் இவர் கல்முனை மாநகரத்தின் மேயராக இருக்கும் நிஸாம் காரியப்பருடன் கூட சுமூகமான உறவைப் பேணி இணைந்து செயற்படுவதை விடுத்து தனியாக தன்னுடைய பிரத்தியேக அரசியல் செயற்பாடுகளை பிரதேசவாதத்துடன் முன்னெடுக்கலானார். இச்செயற்பாடு மக்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்தாதால் மக்கள் தொடர்ந்தும் மௌனமாகவே இருந்து வந்தனர். 

அவ்வாறிருக்கையில் தான் நல்லாட்சிக்கான பயணத்தில் மு.கா எவ்வாறான முடிவை எடுக்கப்போகின்றது என்பது குறித்து நெருக்கடியான காலகட்டம். ஜனாதிபதி உட்டப உயர் மட்ட அரசாங்கத் தரப்பினருடன் பல்வேறு மட்டத்திலான பேச்சுக்கள் மாறிமாறி இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணம். அதன் போது மு.காவினுள் பிளவை ஏற்படுத்தி பலமிழக்கச் செய்யவேண்டும் என்பதில் அரசாங்கம் அதியுச்ச பிரயத்தனம் காட்டிவந்தது. இச்சந்தர்ப்பத்தில் சேதாரமின்றி கட்சியை பாதுகாத்து வெளியேற வேண்டும் என்ற அதீத உத்வேகத்துடன் மு.கா தலைமை செயற்பட்டுக்கொண்டிருந்தபோது தேர்தலுக்கு நெருங்கிய காலப்பகுதியில் நள்ளிரவன்று தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தும் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்;து கல்முனை மக்களின் ஆணையுடன் பாராளுமன்ற பிரவேசம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அலரிமாளிகையில் ராஜபக்ஷவின் புதல்வருடன் கலந்துரையாடிக்கொண்டிருந்துள்ளார். குறிப்பாக இதன்போது பிறிதொரு முஸ்லிம் அமைச்சருக்கும் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் கல்முனையில் ஆணைபெற்ற ஒருவர் அங்கிருந்த தகவல் வெளிப்பட்டது. 

அச்சம்பவம் நடைபெறாது விட்டிருந்தால் அங்கு சென்று கலந்துரையாடல்களைச்செய்து விட்டு பின்னர் கல்முனையிலும் அம்பாறையிலும் மக்களின் இரத்தத்தை சூடேற்றும் வார்த்தைகளை பிரயோகித்துவிட்டு மு.காவின் தலைவரை அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவராகவும் பதவியாசைபிடித்தவர் என்றும் பழிகூறிவிட்டு இருந்திருப்பார்கள். ஆனால் நள்ளிரவு நேரத்தில் அலரிமாளிகையில் இருந்தமையானது மக்கள் மத்தியில் அவர் போடும் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுடன் கல்முனைக்கு சரியான மக்கள் பிரநிதிதி யொருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றாரா என்ற சிந்தனையையும் கூர்ப்படையச் செய்திருக்கின்றது. 

அதனை விடவும் 2002ஆம் ஆண்டு மு.காவை பிளவுபடுத்தி கட்சியை விட்டு வெளியேறியவர் பின்னர் 2004ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் பொதுஜன முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் பெரும்பான்மை அரசாங்கத்தின் இணைந்து போட்டியிட்டமையே மு.காவிலிருந்து பிரிந்துசென்ற அதவுல்லா, அன்வர் இஸ்மயில் ஆகியோர் தமது அரசியலை நிலைபெறச் செய்வதற்கும் மறைமுகமாக உதவியது. 

அதன் பின்னர் மீண்டும் 2006ஆம் ஆண்டு மீண்டும் கட்சியில் தஞ்சமடைந்தவரை கல்முனை மாநாகரத்தின் மேயர் பதவியை அலங்கரிப்பதற்காக கட்சித்தலைமை இடமளித்தது. இருப்பினும் அச்சமயத்தில் இவருடைய வேட்புமனு பட்டியல் நிராகரிக்கப்படவும் பின்னர் வண்ணாத்துப்பூச்சி சின்னத்தில் களமிறங்கிய சுயாதீன குழுவை மு.காவின் அரசியல் குழுவாக உள்ளீர்த்து இவரை மேயர் ஆசனத்தில் அமர்த்தியது மட்டுமல்ல அப்போதைய மத்திய அரசாங்கத்துடன் கடும்பிரயத்தனத்தின் மத்தியில் வாதப்பிரதிவதங்களை மேற்கொண்டு சட்டங்களை மாற்றியமைத்து இவரின் பதவியை முழுமையாக மு.க தலைமை உறுதி செய்து கொடுத்திருந்தது.  அதனைத் தொடர்ந்து மீண்டும் 2010ஆம் ஆண்டு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இவரை அம்பாறையில் போட்டியிடுவதற்கு மு.காதலைமை இடமளித்தது. அதேநேரம் தற்போது கிழக்கு மாகாண உறுப்பினராக இருக்கும் மன்சூர் சம்மாந்துறையில் போட்டியிட்டு சொற்பவாக்குகளில் தோல்வியுற்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு ஹரீஸ் அம்பாறையில் வெற்றி பெற்றேயாகவேண்டும் என்பதற்காக மேற்கொண்ட சுயநலச் செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றன. அத்தருணத்தில் இவர் ஒருபோதும் கட்சிக்கு மேலதிகமாக ஒரு பாராளுமன்ற பிரநிதித்துவம் கிடைக்கின்றதே என்பதைக் கூட கருதாது  செயற்பட்டிருந்தார் என்பதையும் மனவருத்தத்துடன் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. 

இந்நிலையில் தான் தற்போது அம்பாறை மாவட்டத்தை பொதுவாக கருத்தில் கொண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எம்.ரி.ஹசன் அலிக்கு இராஜங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதுடன் திருமலை மாவட்டத்தின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கு பிரதியமைச்சு பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவே கல்முனை புறக்கணிக்கப்படவில்லை. ஆனால் குறித்த மக்கள் பிரிநிதியின் செயற்பாடுகள் கட்சித்தலைமை உட்பட மக்களின் நன்மதிப்பை பெறாமையே அந்த அதிகாரம் கல்முனைக்கு கிடைக்காமல் போவதற்கு மூலகாரணமாகின்றது. இவ்வாறான நிலைமையை நாம் வைத்துக்கொண்டு எமக்கு அதிகாரமளிக்க மு.கா தலைமை தவறிவிட்டது என தூற்றுவது சாலப்பொருத்தமற்றதொரு கருத்தாகும். கல்முனையைப் பொறுத்தவரையில் கடலுக்கு செல்வதும் மீண்டும் எப்படி கரைசேருவோமோ என்றியாத அப்பாவி கரையோர மீன மக்கள் முதல் எமது எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என கனவுடன் காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் முதல் கல்முனையை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் என கருதும் புத்திஜீவிகள் வரை பலரும் இலட்சியத்துடனேயே ஒவ்வொருபொழுதையும் கழித்து வருகின்றார்கள். 

இவ்வாறான இலட்சியமுடையவர்கள் வாழும் முஸ்லிம் சமூகத்தின் இதயத்தின் துடிப்பான கல்முனையை பிரதேசவாத அரசியல் விலைபோகும் அரசியல் போன்றவற்றால் சீரழிப்பதற்கு முயலும் தலைமைகளையும் அரசியல் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி கல்முனைக்கே உரித்தான பேரம்பேசும் சக்தியுடன் தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க மக்கள் பிரதிநிதித்துவமொன்றை உருபெறச்செய்வதே சாலச்சிறந்தது என்பதுடன் வளமான எதிர்காலத்திற்கும் உகந்ததான செயற்பாடாக அமையும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். 

ஆகவே இருள் சூழந்திருக்கும் கல்முனை மக்களின் தலைமையை ஏற்கும் புதிய பிரதிநிதிகளை நாம் தேடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இலைமறை காயாக இருக்கும் ஒருவரை நாம் இங்கு முன்மொழிகின்றோம். குறிப்பாக அனைத்து மக்களின் ஆதரவைப்பெற்று அரசியல் குடும்ப பின்னணியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்கும் விசுவாசமாக மௌமான இருந்துவரும் ஒருவர் தான் அப்துல் ரஹுமத் மன்சூர். இவர் நினைத்திருந்தால் தந்தையின் அமைச்சராக இருந்த காலத்தின் பின்னர் அந்தச்செல்வாக்கை பயன்படுத்தி அரசியலில் நுழைந்திருக்க முடியும். ஆனால் இன்று வரை மக்கள் சேவனாக இருக்கும் அதேநேரத்தில் கட்சிக்கும் தலைமைக்கும் சேவனாகவே இருந்து வருகின்றாரே தவிர அரசியல் களம் காணும் அல்லது அதற்காக செயற்படும் எண்ணங்கள் இல்லாது இருக்கின்றார். 

இந்த நிலையில் நாம் அவரை கல்முனை அரசியல் களத்தில் கால்பதிக்குமாறு பகிரங்கமாக அழைப்பு விடுப்பதுடன் கல்முனையில் பிரதேசவாதமாற்ற, அனைவருக்கும் அபிவிருத்தி வளமாக எதிர்காலம் என்ற பொது இலக்குடன் எமது இனம், மதம், மொழி என்பவற்றை உரிமையுடன் பயன்படுத்தி எமது அபிலாஷைகளை பெற்று சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் எம்மினத்தின் இதயபூமியான கல்முனையில் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்வதை உறுதிசெய்யும் இலக்குடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை உறுதிசெய்பவராக என்றும் இருக்கவேண்டும் எனக் கோருகின்றோம். இது தொடர்பாக அவரின் உத்தியோக பூர்வ முடிவை அறிவிப்பார் என்பதை எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன் மு.காதலைமை அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு இடமளிக்க வேண்டும் என்பதையும் இத்தருணத்தில் வேண்டிக்கேட்கின்றோம்.

காலாகாலமாக கல்முனை அரசியல் களம் காட்டிக்கொடுப்புக்களும் குத்து வெட்டுக்களும் நிறைந்ததாகவே காணப்பட்டுக்கொண்டிருகின்றது. சுயநலம் மிக்கவர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இரட்டை வேடதாரிகளுக்கும் தொடர்ந்தும் எமது ஆணையை வழங்க முடியாது. எம்.எஸ். காரியப்பர், முதல் மாபெரும் தலைவர் அஷ்ரப்  போன்றவர்கள் உதித்த புனித மண்ணில் அந்த நிலைமை நீடிப்பதற்கு தொடர்ந்தும் இடமளிக்காது புதிய மாற்றத்துடன் முன்னெடுக்கப்படவுள்ள நல்லாட்சியில் பங்கெடுக்கும் புதிய அரசியல்பிரதிநிதியொருவரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

எமக்கான எமது மண்ணுக்கான அதிகாரம் மீண்டும் கிடைக்கவேண்டம் என்ற இருதசாப்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து எமது மக்களின் எதிர்காலத்தை உறுதிசெய்வதற்காகவும் அனைத்து தரப்பினரும் எமது சகோதர்கள் என்ற சகோதரத்துவத்துடன் எமக்கான அதிகாரத்தை பெறுதற்காக நாம் திடசங்கலபத்துடன் செயற்படவேண்டிய காலம் ஏற்பட்டிருக்கின்றது. அநதக்;காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் செயற்படவேண்டியது அவசரமான அவசியமாகும் என்பதையும் மிகமிக தெளிவாக புரிந்து கொண்டு எமக்காக எம்மிலிருந்து ஒருவரை தெரிவு செய்வோம். எல்லாவற்றுக்கும்  மேலாக இறைவன் எம்முடன் இருக்கின்றான் இறுதிவரை. இதனை உணர்ந்து செயற்படுவதே புனித இஸ்லாத்தை தழுவிய எமது இப்பிறப்புக் கடமையாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்வோமாக.

5 comments:

  1. நிசாம் காரியப்பர், ஹரிஸ், நிஜாமுதீன், ரஹ்மத் மன்சூர்......இன்னும் யாரோ தெரியாது.. இவர்களின் தொல்லையால் தலைவர் ஹகீம் அவர்கள் துண்ட கானம் துணிய கானம் என ஓடவேண்டி வந்தாலும் வரும்.

    நிசாம் காரிப்பர் ( மிகவும் பொருத்தமானவர் ) அவர்கள் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவாரானால் இந்த பிரதேசத்துக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் ஏன் முஸ்லிம் இனத்துக்கும் நல்லதாக அமையும் என நினைக்குறோம்.

    ReplyDelete
  2. நிசாம் காரியப்பர், ஹரிஸ், நிஜாமுதீன், ரஹ்மத் மன்சூர்......இன்னும் யாரோ தெரியாது.. இவர்களின் தொல்லையால் தலைவர் ஹகீம் அவர்கள் துண்ட கானம் துணிய கானம் என ஓடவேண்டி வந்தாலும் வரும்.

    நிசாம் காரிப்பர் ( மிகவும் பொருத்தமானவர் ) அவர்கள் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவாரானால் இந்த பிரதேசத்துக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் ஏன் முஸ்லிம் இனத்துக்கும் நல்லதாக அமையும் என நினைக்குறோம்.

    ReplyDelete
  3. ஆகவே இருள் சூழந்திருக்கும் கல்முனை மக்களின் தலைமையை ஏற்கும் புதிய பிரதிநிதிகளை நாம் தேடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இலைமறை காயாக இருக்கும் ஒருவரை நாம் இங்கு முன்மொழிகின்றோம். குறிப்பாக அனைத்து மக்களின் ஆதரவைப்பெற்று அரசியல் குடும்ப பின்னணியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்கும் விசுவாசமாக மௌமான இருந்துவரும் ஒருவர் தான் அப்துல் ரஹுமத் மன்சூர். இவர் நினைத்திருந்தால் தந்தையின் அமைச்சராக இருந்த காலத்தின் பின்னர் அந்தச்செல்வாக்கை பயன்படுத்தி அரசியலில் நுழைந்திருக்க முடியும். ஆனால் இன்று வரை மக்கள் சேவனாக இருக்கும் அதேநேரத்தில் கட்சிக்கும் தலைமைக்கும் சேவனாகவே இருந்து வருகின்றாரே தவிர அரசியல் களம் காணும் அல்லது அதற்காக செயற்படும் எண்ணங்கள் இல்லாது இருக்கின்றார்.வரும் பாராளுமன்றம் தேர்தலில் போட்டியிட ரஹுமத் மன்சூர் தகுதியானவர் பொருத்தமானவார் என நினைக்கிறேன் , மேலும் மறைந்த மாபெரும் அரசியல்வாதி எம்,எஸ்,காரியப்பர் பேரனும் ஆவார், கல்முனைக்கும் மாற்றம் தேவை.!

    ReplyDelete
  4. புதிய மாற்றத்துடன் முன்னெடுக்கப்படவுள்ள நல்லாட்சியில் பங்கெடுக்கும் புதிய அரசியல் பிரதிநிதியாக றஹ்மட்மன்சூரை தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.அதாவது இப்பிரதேச நன்மைகருதி எம்.எஸ்.காரியப்பர் முதல் ஏ.ஆர்.மன்சூர் வரை பலசகாப்தமாக இப்பிரதேசத்துக்கு நல்லசேவைகள் செய்து அடையாளப்படுத்தியவர்களின் வாரிசாகவும் தன்னலம் கருதாமல் இப்பிரதேசமக்கள் இம்புற்றிருக்க வேண்டும் என கனவிலும்,நினைவிலும் தன்வாழ்க்கையை இப்பிரதேச மக்களுக்காக அர்பனித்த மன்சூரின் மகனாகிய றஹ்மத்மன்சூரை நாம் தெரிவுசெய்ய முயலவேண்டும்.இன்ஸாஅல்லாஹ்.............

    ReplyDelete

Powered by Blogger.