தோல்வியை ஏற்று, அலரி மாளிகையை விட்டுச் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ (படம் இணைப்பு)
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து தான் அலரிமாளிக்கையில் வெளியேறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்றுக்காலை 6.30 மணியளவில் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.
புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Post a Comment