Header Ads



இருதய சத்திர சிகிச்சைக்காக, உதவி கோரல்

பறகஹதெனிய சிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. கே. நபீல் சிபானா தம்பதிகளின்  நான்கு வயதுடைய புதல்வியான என். சிம்ரா இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய சிறுவர் பராமரிப்பு வைத்தியசாலையின் விசேட இருதய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய அதிகாரி துமிந்த சமரசிங்க இந்த சிகிச்சையை மிக துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்காக 250000.00 மதிப்பீடு செய்யப்பட்டு;ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் இந்தச் செலவில் ஒரு இலட்சம் ரூபா ஜனாதிபதி செயலகத்தின் மூலமாக வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலதிக மீதிப் பணத்தை செலவு செய்வதற்கு வசதியின்மையினால் பெரும் கஷ;டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பிள்ளையின் சத்திர சிகிச்சைக்காக உதவுமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஏ. கே. நபீல்
கணக்கு இலக்கம்  8064429
இலங்கை வங்கி – பறகஹதெனிய 



3 comments:

  1. Kindly Provide Account Details in English

    ReplyDelete
  2. அன்புள்ளம் கொண்ட முஸ்லிம் தனவந்தர்களே! இந்தக் குழந்தைக்கும், இன்னும் இது போன்ற எமது முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள் பாரிய உயிர் கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்காக தங்களுக்கு உதவுமாறு வேண்டுபவர்களுக்கும் தாராள மனதுடன் வாரி வழங்குங்கள். அல்லாஹ் அதன் மூலம் நிச்சயமாக ஈருலகிலும் உங்களுக்கு நன்மைகளை அள்ளித் தருவான். இவர்களைப் பற்றி முன் பின் அறியாத நிலையில் இவர்களின் துயர் துடைப்பதற்காக வங்கிக் கணக்குகளுக்கு (உங்கள் வசதிக் கேற்ப) நீங்கள் வைப்பிலிடுவது இடக்கரம் அறியாமல் வலக்கரத்தால் அளிக்கும் தர்மமாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். அவ்வாறு தர்மம் செய்வோருக்கு எந்த நிழலும் அற்ற மறுமை நாளில் அல்லாஹ் நிழல் கொடுப்பான் என நபி (ஸல்) அவர்கள் பகன்றுள்ளார்கள்.

    ReplyDelete
  3. சென்ற வாரம் சாய்ந்தமருது - 17 ஐச் சேர்ந்த சகோதரி நளீரா அவர்கள் இரு இருதயங்களும் பாதிக்கப்பட்டு சுமார் 35 இலட்சம் ரூபா தேவையான நிலையில் வெறும் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாவை மட்டுமே பெற்றுள்ளார். (அத்தொகையை அளித்தவர்களுக்கு அல்லாஹ் பன்மடங்கு நன்மைகளை வழங்குவானாக) மேலதிகமாக அச்சகோதரிக்கும் முடிந்தளவு உதவுங்கள். அல்லாஹ் இவ்வாறான விடயங்களுக்கு வழங்கும் பணத்தை ஒரு போதும் வீணாக்கமாட்டான்.

    ReplyDelete

Powered by Blogger.