Header Ads



ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்த வரலாற்று தேர்தலொன்றையே நாம் சந்தித்தோம்

(இக்பால் அலி)

  'வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதவாறு இந் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்ததொரு வரலாற்று புகழ் மிக்க தேர்தலொன்றையே நாம் சந்தித்தோம். இன்று நாட்டில் நிம்மதி சந்தோசம் நிலவுகின்றது. அரசியல் மற்றும் கொள்கைரீதியில் பல்வேறு கருத்து வேற்றுமைகளை கொண்ட சக்திகள் ஒன்று சேர்ந்து இவ்வரசாங்கத்தை அமைத்துள்ளோம். மேலும் குறுகிய எதிர்காலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களை இலங்கை சந்திக்கவுள்ளது. குறிப்பாக தேர்தல் முறை மாற்றங்கள் பற்றி அரசின் மேல்மட்ட அவதானம் பதிவாகியுள்ளது. இதில் உங்களை போன்ற சிவில் சமூக அமைப்புகள் அவதானம் செலுத்தி முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பேணப்படுவதற்கான ஆலோசனைகள் விதந்துரைப்புகளை இப்போதிருந்தே கலந்துரையாடப்பட்டு அதை எழுத்து மூலம் ஆவணப்படுத்தி எம்மிடம் சமர்பிக்க ஏற்பாடுகளை செய்வீர்களாயின் இவற்றை உள்வாங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் ' என்று கைத்தொழில் பொருளாதார அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் தெரிவித்தார்கள். 

       மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் கடந்த வரலாற்று புகழ் மிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக களமிறங்கி பாடுபட்ட முஸ்லிம் சிறும்பான்மை கட்சி தலைமைகளை ஒன்று கூட்டி  ஏற்பாடு செய்த பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது, மேற்படி கருத்தை தெரிவித்தார்.

    

1 comment:

  1. அதெல்லாம் சரிதான். ஆனால் மக்களின் முடிவின் பின்னால் இழுபட்டு வந்து தப்பிப் பிழைத்திருக்கும் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் இதுபற்றிப் பேசுவதற்கு சிறிதளவாவது வெட்கம் வரவில்லையா..?

    பாராட்டவேண்டியது யாரை?

    தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்திலேயே யாருக்கு வாக்களிக்க வேண்டும் - முக்கியமாக யாருக்கு வாக்களிக்கவே கூடாது என்றெல்லாம் முடிவுசெய்துவிட்ட மக்களைத்தானே தவிர உங்களைப்போன்ற எலும்புத்துண்டு விரும்பிகளையல்ல.

    அரசியல்வாதிகளின் 'இராஜதந்திரங்'களெல்லாம் அறிந்திராத அப்பாவி அன்றாடங்காய்ச்சி மக்களுக்கு உடனடியாக எடுக்க முடிந்த நிலைப்பாட்டை அரசியல்வாதிகள் உங்களால் வாரங்களில் கூட எடுப்பதற்கு முடியாமல் போனது.

    எதிரணியின் வெற்றி உறுதியென்பது தெரிந்ததும் கடைசி நேரத்தில் ஓடும் ரயிலில் வந்து ஒட்டிக்கொண்டு இப்போது எல்லாவற்றையும் வசதியாக மறந்து விட்டு நாடகமாடி மக்களை ஏமாற்ற முனைய வேண்டாம்.

    ராஜபக்ஷவையே தூக்கியெறிந்த மக்களுக்கு நீங்களெல்லாம் ஒரு பொருட்டேயல்ல!

    ReplyDelete

Powered by Blogger.