Header Ads



மைத்திரி அரசாங்கத்தின், நாட்டு மக்களுக்கான பரிசு

இலங்கையில் இன்று 22-01-2015 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிய விலைகளின் பட்டியல்படி:

92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 117 ரூபா,

95 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 128 ரூபா,

டீசல் ஒரு லீற்றர் 95 ரூபா,

விசேட டீசல் 110 ரூபா,

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 65 ரூபாவாகும்.

புதிய தேசிய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைய எரிபொருள் விலைக்குறைப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் 81 ரூபாவிறகு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணை நாளைமுதல் 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தநிலையில் விரைவில் அத்தியாவசியப்பொருட்களின் விலைகளும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. போக்கு வரத்து கட்டணங்கள் பாரியளவில் குறைக்கப்பட வேண்டும். ஆட்டோ சாரதிகள் அறவிடும் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும். பெற்றோல் டீசலுடன் ஒப்பிடும்போது மண்ணைய்யின் விலைக் குறைப்பு போதுமானதாக இல்லை. ஏழைகள் சமையல் தேவைகளுக்காக அதிகம் பாவிக்கும் மண்ணெய்யின் விலை பெரியளவில் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். 16 ருபா குறைப்பு என்பது போதுமானதாக இல்லை.

    ReplyDelete
  2. thanks to all your help to us Mr president.

    ReplyDelete

Powered by Blogger.