பொலிஸ் சீருடையை அணியவிரும்பும் ஹிருணிக்கா
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவுக்கு அணிந்து கொள்வதற்காக தனது சாரியை வழங்கத் தயாராக இருப்பதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர கிண்டல் செய்துள்ளார்.
நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த போது அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருந்தார்.
ராஜபக்சவினரின் ஆட்சியில் பொலிசாரின் மரியாதை தரம் தாழ்ந்திருப்பதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அரசாங்கத்தின் அழுக்குகளை கழுவும் வேலையை பொறுப்பெடுத்திருப்பதாகவும் ஹிருணிக்கா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் போதை மருந்து விற்பனை தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவ்வாறான இடங்கள் குறித்து ஹிருணிக்கா தகவல் அளித்தால் அந்த இடங்களை முற்றுகையிட்டு சோதனை நடத்த தாம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த ஹிருணிக்கா,
எனது சாரியை நான் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு தரத் தயாராக இருக்கிறேன். அவர் இதை அணிந்து கொண்டு மூலையில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அதற்குப் பதிலாக அவரது பொலிஸ் சீருடையை எனக்குத் தந்தால் அதனை அணிந்து கொண்டு நான் போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காக செல்லவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.

அடிடா சக்க..........!
ReplyDelete