இலங்கை வாழ் முஸ்லிம்களே..! சர்வதேச வாழ் இலங்கை முஸ்லிம்களே..!!
-அஸ்ஷேக் - ஆரிப் ஹாபிஸ் (ஸஃரி) மாவடிப்பள்ளி-
இலங்கை வாழ் முஸ்லிம்களே ! உங்களின் கவனத்திற்கு
நாம் எதிர் நோக்கியிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகும்.
இந்த தருணத்தில் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டிய வணக்கங்கள் (அமல்கள்) சில இருக்கின்றன. அவைகளை நாம் செய்வோம் என்றால் அது முஸ்லிம்களாகிய நாம் மட்டுமல்ல இலங்கை வாழ் மக்கள் அனைவரையுமே ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழி வகுக்கும்.
அதற்கான சில வழிமுறைகள் :
1. யார் எதைச் சொன்னாலும் அல்லாஹ்தான் அனைத்தையும் செய்கின்றவன் எனும் ஈமானிய உணர்வை நாம் என்றும் மறக்கக்கூடாது. இதன் மூலம் நாம் விளங்குவது ஆட்சியாலனைத் தீர்மானிப்பவனும் அல்லாஹ்தான் ஆட்சியாளனை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பவனும் அல்லாஹ்தான் என்பதை நாம் மனதில் ஆழப்பதித்துக் கொள்ள வேண்டும்.
2.பாவங்களில் ஈடுபடாமல் அவற்றை உள்ளத்தால்
வெறுத்து அல்லாஹ்வுக்கு வழிப்படுவோம். ஏனெனில் அப்போதுதான் எமது ஆட்சியாளர்களை எம்முடன் கருனையுள்ளவர்களாக அல்லாஹ் மாற்றித் தருவான். இதனைத்தான் பின்வரும் ஹதீஸே குத்ஸீ தெளிவு படுத்துகின்றது. ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளன் நானே. ஆட்சியாளர்களின் உள்ளங்கள் எனது கையில்தான் உள்ளது. எனவே என் அடியார்கள் எனக்கு வழிப்பட்டால் அவர்களது ஆட்சியாளர்களின் உள்ளங்களை அவர்களுடன் கருனையுள்தாகவும் இரக்கமுள்ளதாகவும் மாற்றி விடுவேன். என் அடியார்கள் எனக்கு மாறு செய்தால் அவர்களது ஆட்சியாளர்களின் உள்ளங்களை அவர்களுடன் வேதனை செய்யக்கூடியதாகவும் கோபப்படக்கூடியதாகவும் மாற்றி விடுவேன். அந்நேரத்தில் உங்களது ஆட்சியாளர்களுக்கு ஏசியும் துஆக் கேட்டும் உங்களை நீங்கள் வீணாக்கிக் கொள்ளாதீர்கள். அந்த ஆட்சியாளர்களின் சீர் சிருத்தம் உங்களது சீர்சிருத்தத்தைக் கொண்டே இருக்கின்றது.
3. இன்றிலிருந்து அதிகமாக இஸ்திஃபார் (பாவமண்ணிப்பு) செய்வோம்.
لاَ إلهَ إلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْن
( லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாலிமீன் )
அல்லாஹ்வைத் (உன்னைத்) தவிர வேறு இறைவன் இல்லை நீ தூய்மையானவன் நிச்சயமாக நான் அநியாயம் (பாவம்) செய்து கொண்டிருக்கின்றேன் (என்னை மண்ணித்து விடு)
இன்றிலிருந்து முடிவு வரும் வரையில் இந்த இஸ்திஃபாரை அதிகமாக ஓதுவோம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் பாவ மண்ணிப்பில் ஈடுபடுகின்றாரோ அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற கஸ்ட்டங்களையும் துன்பங்களையும் அல்லாஹ் போக்கி விடுகின்றான் எனவே எம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற அவல நிலை நீங்க வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் பாவமண்ணிப்புத் தேடுவதில் ஈடுபடுவோம்.
4. அதே போன்று இந்த திக்ரையும் அதிகமாக ஓதுவோம்.
حَسْبِيَ اللهُ
ஹஸ்பியல்லாஹ்
(அல்லாஹ் எனக்குப் போதுமானவன்)
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْل
(ஹஸ்புனல்லாஹு வனிஃமல் வகீல்)
அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்.
அன்றைய நாளில் வீணாணவைகளை விட்டு விட்டு திக்ர், துஆ போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவோம்.
5. நாம் அதிகமாக துஆவில் ஈடுபடுவோம். ஏனெனில் அல்லாஹ் துஆவின் மூலம் எமது கலாகத்ரை மாற்றியமைக்கின்றான்.
இன மத மொழி வேறுபாடின்றி எல்லா மக்களும் சந்தோசமாக மன நிம்மதியாக ஐக்கியத்துடன் வாழ அல்லாஹ்விடத்தில் கையேந்துவோம்.
குறிப்பாக கீழ்வரும் துஆக்களையும் கருத்து விளங்கி அதிகமாக அல்லாஹ்விடத்தில் கேட்போம்.
اللهمَّ لَا تُسَلِّطْ عَلَيْنَا بِذُنُوْبِنَا مَنْ لاَ يَخَافُكَ فِيْنَا وَلاَ يَرْحَمُنَا (அல்லாஹ}ம்ம லா துஸல்லித் அலைனா பிதுனூபினா மல்லா யஹாபுக பீனா வலா யர்ஹமுனா) யா அல்லாஹ் நாம் செய்யும் பாவங்களினால் உனக்கு அச்சப்படாத எங்களுக்கு இரக்கம் காட்டாத ஆட்சியாளர்களை எமக்கு சாட்டிவிடாதே !
أللهم إنِّيْ أعُوْذُ بِكَ مِنْ قَهْرِ الرِّجَالِ
(அல்லாஹ}ம்ம இன்னீ அஊது பிக மின் கஹ்ரிர் ரிஜால்)
யா அல்லாஹ் மனிதர்களின் அடக்கு முறையிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
أللهم إنِّيْ أعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الرِّجَالِ
(அல்லாஹ}ம்ம இன்னீ அஊது பிக மின் எலபதிர் ரிஜால்)
யா அல்லாஹ் மனிதர்கள் எங்களை மிகைப்பதிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
6. குறிப்பாக தேர்தல் தினத்திலன்று தஹஜ்ஜத் நேரத்திற்கு எழும்பி தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றி விட்டு இந் நாட்டிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம்களுக்கு சாதகமான நல்லாட்சி நிலவ அல்லாஹ்விடத்தில் இரைஞ்சுவோம்.
7.தேர்தலன்று சுபஹ் தொழுiகையை நிறைவேற்றி விட்டு சூறா யாசீனை ஓதி முஸ்லிம்களுக்கும் ஏனையவர்களுக்கும் சாதகமான ஆட்சி நிலவுவதற்கு துஆச் செய்து விட்டு வாக்களியுங்கள். (அன்றைய தினம் இந் நிகழ்வை நாட்டிலுள்ள ஒவ்வொரு மஸ்ஜிதிலும் செய்தால் அது மிக ஏற்றமானது)
8. முடியுமானவர்கள் அன்றைய தினம் நோன்பு பிடியுங்கள்.
9. எக்கட்சிக்கு எமது ஆதரவு இருந்தாலும் அதற்காக வேண்டி எமக்கு மத்தியில் காணப்படும் ஒற்றுமையை இழந்து விடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம். குறிப்பாக தேர்தல் முடிவின் பின் யாரினதும் உள்ளங்களை உடைத்து விடாது அனைவரினதும் உள்ளங்களை சந்தோசப்படுத்துவோம்.
10. வெற்றியோ தோல்வியோ எது ஏற்படினும் கலாகத்ரின் படி அல்லாஹ்வின் நாட்டம் நடந்தேறியது என்கின்ற ஈமானை உள்ளத்தில் வளர்த்துக்கொண்டு தோல்வியில் பொறுமையுள்ளவர்களாகவும் அல்லது வெற்றியின் குதூகழிப்பில் யாரையும் புன்படுத்தாது அல்லாஹ்வை சந்தோசப்படுத்தக் கூடியவர்களாகவும் மாறுவோம். அன்பின் இலங்கை வாழ் முஸ்லிம்களே! இவைகளை கடைப்பிடியுங்கள் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் முடிவை அல்லாஹ் தருவான்.
சர்வதேச முஸ்லிம்களே !
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக இக்கட்டத்தில் நீங்கள் செய்யும் உதவி துஆதான். எனவே ! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இந் நாட்டு முஸ்லிம்களுக்காக துஆச் செய்யும் படி தயவாய் வேண்டிக் கொள்கின்றேன்.
.jpg)
*insha allah.... allah nam anaiwarudaiya duaahkalaium kabool seiwanaha.
ReplyDelete*namathu nattuku nal atche purium talaiwarhalai taruwanaha.
*inda widayathtai kooriya ungalukkum anaithu muslim kalukkum allah rahmath seiwanaha. Aameen.
மாஷா அல்லாஹ் சுய நலமின்றி .சமூக வேட்கையுடன்,சூழ்நிலையின் புரிதலோடு ,வழங்கப்பட்ட மிக அவசியமான பதிவு, மிக்க நன்றி சகோதரரே!அல்லாஹ் த் ஆலா உங்களுக்கு மேலும் பலவ்ற்றை உதிப்பாக்கித்தருவானாக.
ReplyDeleteஇது எமது கடமை, கண்டிப்பாக நாம் செய்வோம். அத்துடன் இவ்விடயம் அதிகம் அதிகம் நம்மவர்களிடையே பகிரப்பட்டு அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும். இளைஞர்களே நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஐந்துபேருக்கு இச்செய்தியினை எத்திவையுங்கள் அது பெரியதொரு மாற்றத்தினையும் அனைவரிடமும் செய்தி சென்றடையும் வழியாகவும் ஒற்றுமையை நிலை நாட்டவும் அது பேருதவியாக இருக்கும்.
ReplyDeleteAmeen !! Yarab!! Unatu mudivil amakku tirupthiyay tantu arulwayaka Ameen Yarab!!
ReplyDelete