Header Ads



'இறுதி தேர்தல் பிரச்சாரம்' மைத்திரிக்கு 7, மகிந்தவுக்கு 4

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான  மகிந்த மற்றும் மைத்திரி ஆகிய இருவரையும் ஆதரித்து  இறுதிப் பரப்புரைக் கூட்டங்களை  இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இதன்படி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நிவித்திகல, அம்பிலிப்பிட்டிய, தெவிநுவர, காலி, களுத்தறை, மொரட்டுவ, மருதானை ஆகிய ஏழு பிரதேசங்களில் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் மைத்திரியின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் இன்று இரவு கொழும்பு,  மருதானை டவர் மண்டபத்திற்கு முன்னாள் இடம்பெறவுள்ளதாகவும் பொது எதிரணியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

 மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவை ஆதரித்து திஸ்ஸமஹாராம. அம்பலான்கொட, மத்துமக மற்றும் கெஸ்பேவ பிரதேசங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

 இதில் கெஸ்பேவ கூட்டமே ஐ.ம.சு.முன்னணின் இறுதிப் பரப்புரைக் கூட்டமாக  இன்று இரவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.