மஹிந்தவின் 2 பிள்ளைகளுக்கு பயிற்சியில் ஈடுபட தடை - வேதனைப்படுகிறார் நாமல்
தமது சகோதரர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமது இளைய சகோதரர்களான யோசித மற்றும் ரோஹித ஆகியோர் அரசியல் ரீதியாக குரோத உணர்வுடன் பழிவாங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சகோதரர்கள் இருவரும் கடற்படை மற்றும் இராணுவம் ஆகிய ரக்பி அணிகளில் தலைவர்களாக கடமையாற்றி வந்ததாகவும் தற்போது அவர்கள் பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எந்தவிதமான காரணங்களும் அறிக்காது பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத்துறையில் குரோத உணர்வுடன் பழிவாங்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
விளையாட்டு அணிகளில் திறமை மிக்க வீரர்களாக திகழ்ந்து, தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் இருவரும் அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தால் அது நிச்சயம் பழிவாங்கல் நிகழ்வுதான். அதனை ஒருபோதும் அனுமதிக்கவோ ஆதரிக்கவோ கூடாது.
ReplyDeleteஅதேவேளை, விளையாட்டில் திறமையும் தகுதியும் கொண்ட எத்தனையோ வீரர்கள் காத்திருக்க அன்றைய ஜனாதிபதியின் புதல்வர்கள் எனும் ஒரே காரணத்திற்காகவே கடந்த ஆட்சிக்காலத்தில் இவர்கள் அணியில் இடம்பிடித்திருப்பார்களாயின்...?
தவிர, சகோதரர்களில் இளையவர் கடற்படையில் இணைந்ததே பெரும் மோசடி என்பதாக செய்திகள் ஆதாரத்துடன் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் விளையாட்டு அணியில் மட்டும் நேர்மையாக இணைந்திருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?
எவ்வாறாயினும் இன்னும் பல உண்மைகள் வெளிவந்தால்தான் இது உண்மையில் பழிவாங்கலா அல்லது முன்வினைப் பயனா என்பது தெரியவரும்.
government must investigate about former rugby player who passed away in his vehicle or somewhere about his mysterious death must punished who is criminal.
ReplyDelete