கண்டியில் மைத்திரிபால சிறிசேன - 2 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் எண்கோண மண்டபத்தில் உள்ள பத்திரிப்பிலிருந்தே அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அதற்கு முன்னர், தலதா மாளிகையில் வழிபடுவதுடன் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பொது எதிரணியின் கட்சித்தலைவர்கள் வாகன பவனியாக கண்டியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கிலிருந்து இன்றுக்காலை 8 மணியளவில் புறப்பட்ட வாகனபவனி, கண்டிக்கு சென்றுவிட்டதாகவும் வீதியின் இரு புறங்களிலும் குழுமியிருக்கின்ற ஆதரவாளர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தார்.

Post a Comment