ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 17 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையானது
ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் 17 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் 1 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளத் தவறிய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுயாதீன வேட்பாளர்கள் இரண்டு பேரினதும், 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களதும் கட்டுப் பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
மேலதிக தேர்தல் ஆணையாளர் யு.அமரதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
சுயாதீன வேட்பாளர்கள் தலா 75 ஆயிரம் ரூபாவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணமாக செலுத்தி இருந்தனர்.
இதன்படி அவர்களால் செலுத்தப்பட்ட 9 லட்சம் ரூபாய் கட்டுப்பணம் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment