கோழிகளை விற்பனை செய்யும் சந்தையில், தற்கொலை தாக்குதல் நடத்திய 10 வயது சிறுமி - 19 பேர் மரணம்

வட கிழக்கு நைஜரியாவில் 10 வயது சிறுமியின் உடலில் குண்டை கட்டி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சுமார் 19 பேர் கொல்லப்பட்டனர்.
போர்னோ மாநிலத்தின் மெய்டிகுரி நகரில் பரபரப்பான சந்தை ஒன்றில் நேற்று முன்தினம் இந்த குண்டு வெடித்தது. "குண்டு அவளது உடலை சுற்றி கட்டப்பட்டுள்ளது" என்று பொலிஸ் தரப்பு ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பு கோரவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் வாரமொன்றிற்குள் இரு பெண் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த தாக்குதலில் பொகோ ஹராம் ஆயுததாரிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.
நைஜPரியாவின் போர்னோ மாநிலத்தில் இஸ்லாமிய அரசொன்றை நிறுவ போராடுவதாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக கொ^ரமான தாக்குதல்களை நடத்திவரும் பொகோ ஹராம் குழு கூறி வருகிறது.
குறித்த சிறுமி கோழிகளை விற்பனை செய்யும் சந்தையில் தனது உடலில் கட்டப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக போர்னோ மாநில பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மறுபுறம் பாகா என்ற நகரை போகோ ஹராம் பிடித்துள்ளது என்றும் அங்கிருந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வரும் நிலையில், பல ஆயிரம் பேர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
Post a Comment