Header Ads



சர்வதிகார ஜனாதிபதி என்ற சர்வதிகார பிசாசை விரட்ட வேண்டும் - JVP

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என ஜே. வீ. பி கோரியுள்ளது.

ஜே.வீ.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் நிட்டம்புவயில் இன்று 09-12-2014  இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

சிலர் நாட்டுக்கு தற்போது சனி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தவிர்க்கவே மைத்திரி தேர்தலில் போட்டியிடுவதாக கூறுகின்றனர்.எனினும், சனி தோஷத்தை துடைப்பதற்கு மைத்திரியை முன்னிறுத்துவதனால் மாத்திரம் முடியாது என விஜித் ஹேரத் குறிப்பிட்டார்.

மைத்திரியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். எனினும் அதனை மாத்திரம் செய்யாமல் வியாபித்திருக்கும் சர்வதிகார ஜனாதிபதி என்ற சர்வதிகார பிசாசை விரட்ட வேண்டும்.

இல்லையெனில் சர்வதிகார ஜனாதிபதி என்ற பிசாசு முகத்தை மட்டும் மாற்றி கொண்டு மாறு வடிவத்தில் வரக் கூடும்.

எனவே வாக்களித்து விட்டு ஒரு பக்கமாக இருப்பதால் எதுவும் நடக்க போவதில்லை என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.