Header Ads



மஹிந்த ராஜபக்ச சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம், இன்று திங்கட்கிழமை (01) தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டது. 

இந்த கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் அங்கு கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா,

கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிகப்படியான வாக்குகளால் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான சகல தேர்தல் வியூகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,

கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தமது கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இதுவரையில் 14 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் மேலும் சில அரசியல் கட்சிகளும் குழுக்களும் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான பசில் ராஜபக்ச சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



1 comment:

  1. கட்டுப்பணம் திரும்ப கிட்டுமா அதுவும் சந்தேகம்தான்

    ReplyDelete

Powered by Blogger.