Header Ads



பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, ஆயுததாரிகளை தூக்கிலிட ஆயத்தம்

பாகிஸ்தான் சிறைகளில் சுமார் 8 ஆயிரம் கைதிகள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்கிடையில், மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை. உலகின் பல நாடுகள் இந்த மரண தண்டனையை ஒழித்துவிட்ட நிலையில் பாகிஸ்தானும் இது தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும் என அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.

இது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகவும், இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரையில் யாரையும் தூக்கிலிடக் கூடாது என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்க வாதிகள் அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 145 பேர் பலியாகினர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மரண தண்டனையை ரத்து செய்து விட்டால் இதைப்போன்ற தாக்குதல்களை நடத்த செய்யும் தவறுகளுக்கு உரிய தண்டனையை அளிக்கவே முடியாது. எனவே, மரண தண்டனையை ரத்து செய்யும் ஆலோசனைக்கு இனி இடமே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தற்போது திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இந்த அறிவிப்பையடுத்து, மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் சில முக்கிய ஆயுததாரிகள் உடனடியாக தூக்கிலிட்டு கொல்லப்படுவார்கள் என பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் இன்று தெரிவித்துள்ளார்.

இதில், முதல்கட்டமாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமைச் செயலகம் அருகே கடந்த 2009-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் கைதான அகீல் (எ) டாக்டர் உஸ்மான் மற்றும் கடந்த 2003-ம் ஆண்டு அந்நாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் உயிரை குறிவைத்து தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில் அர்ஷாத் மஹ்மூத் ஆகியோர் இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களில் தூக்கிலிடப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் உள்பட 17 ஆயுததாரிகளை முதல்கட்டமாக தூக்கிலிடும் இறுதி உத்தரவில் அந்நாட்டின் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப் நேற்றிரவு கையொப்பமிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 45 ஆயுததாரிகள் இரண்டாவது கட்டமாக தூக்கிலிடப்படுவார்கள் எனவும் அந்த செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன.

2 comments:

  1. atchi la irukkura MUSHARAF, NAWAS SHAREEF, KING ABDULLAH, EGPT SISI, IRAK PRIM MINISTER , PONDRAWAGAL SEYTHA KUTRAMGALUKKU APPA THOOKU THANDANA????

    ReplyDelete

Powered by Blogger.