சம்மந்துறையின் சிறந்த கல்விமானும், சிரேஸ்ட அதிபருமான தமீம் காலமானார்
-யு.எல்.எம். றியாஸ்-
சம்மந்துறையின் சிறந்த கல்விமானும் சிரேஸ்ட அதிபருமான எம்.எஸ்.எம். தமீம் அதிபர் இரவு (25.12.2014) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .
இவர் சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி, சம்மந்துரை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியவற்றில் தனது அதிபர் பணியை மேற்கொண்டார். கடந்த 2012ம் ஆண்டுவரை சம்மந்துரை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபராக கடமையாற்றி தனது அதிபர் பணியில் இருந்து ஒய்வு பெற்றார்.
அது மட்டுமல்லாது இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள முன்னணி பாடசாலைகளிலும் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
நேற்று மாலை திடீர் சுகவீனமுற்ற நிலையில் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜனாஸா இன்று (26.12.2014) அசர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
.jpg)
inna lillahi wa inna illaihi rajiun
ReplyDeleteInna Lillahi Vainna Ilaihi Rajiun
ReplyDelete