றிசாத் பதியுத்தீன், வடக்கு முஸ்லீம்களை றிசாத் காட்டிக்கொடுத்துவிட்டார் - பசில் ராஜபக்ச
-அஸ்ரப் ஏ.சமத்-
மன்னார் மாவட்டத்தின் ஜனாதிபதியின் தேர்தல் வேலைகளுக்காக அமைச்சர் றிசாத்பதியுத்தீன் நியமிக்க பட்டு இருந்தார். அவர் எதிரணிக்குச் சென்றதால் - மண்னாரில் ஜனாதிபதி மஹிந்தவின் தேர்களை கண்காணிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவை ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் குழு நியமித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் இன்று பி.பகல் தமிழ் பத்திரிகைகளில் விசேட பேட்டி ஒன்றை வழங்கினார். அதில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் எதிர்தரப்பு சென்றமை பற்றியும் அதனைக் கண்டித்தும் வடக்கு முஸ்லீம்களை றிசாத் காட்டிக்கொடுத்துவிட்டார். எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment