எந்த பொதுசேவையும் செய்யாத மைத்திரிபால, அரச தலைமைக்காக மக்களிடம் வாக்கு கோருகிறார்
-Sfm-
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் எந்தவொரு பொது சேவையையும் மேற்கொள்ளாத பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச தலைமைக்காக மக்களிடம் வாக்கு கோரி நிற்பதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்ற தருணத்திலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
எமது ஜனாதிபதி கூறுகிறார், நான் பயங்கரவாதத்தை முறியடித்தேன் நாட்டில் முற்போக்கான அபிவிருத்தியுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினேன் என்று. வறுமையை ஒழித்ததுடன், பாதை அபிவிருத்திகளை மேற்கொண்டதாகவும், மின்சார விநியோகங்களை சீர்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எனவே உங்களிடம் வந்து நான் மக்கள் ஆணையை கோருகிறேன் என்றுதான் ஜனாதிபதி கேட்டார். மைத்திரிபால சிறிசேன என்ன கேட்கிறார். சிகரட் பெட்டிகளில் 60 சதவீத எச்சரிக்கையை பதிவு செய்ய முடியாமல் போனது அதனால் வாக்களியுங்கள், ஒளடதங்கள் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வந்தேன் அதனை யாரோ களவெடுத்துவிட்டார்.
எதனையும் செய்ய இயலாமல் போய்விட்டது அதனால் வாக்களியுங்கள் என்று மைத்திரிபால கேட்கிறார். அதேபோன்று, நான்தான் யுத்தத்தில் வென்றேன் என தெரிவித்து கொண்டு சரத்பொன்சேகா வாக்கு கோரி நின்றார்.

கழிசறை(டை) எப்படி கல்வி அமைச்சாரானான். ஓ ஆட்சியே கழிசறை ஆட்சிதானே நடக்கின்றது
ReplyDeleteMY3 amaicharaga irukkum podhu seidha sewaigal
ReplyDeleteMY3 edhiranikku pohum podhu enna sewai sedhaaaar ??????????
ena maruhindrathu
matram ondruthaan maaradhathu enbadhai urudhipaduthiwiteeer sp.thisanayakka awarhale
v r nw gnrtn
so v need nly a chng pa
pls undstd our flngs
lets gv a chnc 2 MY3