Header Ads



ஜீவன் குமாரதுங்க ஏற்பாடு செய்த, பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஸ


நாட்டின் அபிவிருத்தியை பார்த்துக்கொண்டிருந்த தரப்பினர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியின் வெற்றியை உறுதிசெய்வதற்காக அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவினால் மொரட்டுவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டி உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த கருத்தினை கூறினார்.

2010ஆம் ஆண்டின் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு திட்டத்தின் ஊடாக இந்த நாட்டின் அபிவிருத்திக்கான அடித்தளத்தை இட்டதாகவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரே இடத்தில் தேங்கிக்கிடந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியதுடன், மக்களின் வருமான வழிவகைகளை அதிகரிக்கக்கூடிய வழிமுறைகளை தயாரித்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

திவிநெகும வேலைத்திட்டத்தை ஆரம்பித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றுவதற்குரிய வழி வகைகளையும் தாம் ஏற்படுத்தியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த திட்டங்கள் அனைத்தின் ஊடாகவும் நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்கின்றபோது, அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது, குரோத மனப்பான்மையுடன் சில தரப்பினர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.

இத்தகையவர்களுக்கு கொள்கையோ அல்லது வேலைத்திட்டங்களோ இல்லையென ஜனாதிபதி இதன்போது மேலும் கருத்து தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.