றிஸாட் பதியுதீன் + அமீர் அலி ஆகியோருக்கு ஓட்டமாவடியில் மாபெரும் வரவேற்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரமான றிஸாட் பதியுதீன் மற்றும் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோருக்கு இன்று (25.12.2014) மாலை ஓட்டமாவடியில் மாபெரும் வரவேற்பு இடம் பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மயித்திரிபால ஸ்ரீசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்திற்கு முதல் தடவையாக வருகை தந்ததையிட்டு இந்த வரவேற்பு இடம் பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளார் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம் பெற்ற இவ் வரவேற்பு வைபவம் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமாகி வாகன பவனியாக பிரதான வீதி வழியாக ஓட்டமாவடி பிரதேச சபை வரை அழைத்து வரப்பட்டு பிரதேச சபை முன்பாக கூட்டமும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சபைர், ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.ரீ.அஸ்மி, ஏ.மீரான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Post a Comment