மைத்திரியின் பக்கம் சாய்ந்த, முன்னாள் பிரதியமைச்சரை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
(றபாய்தீன்பாபு ஏ.லத்தீப்)
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் பௌத்தசாசன பிரதி அமைச்சரும் ஜனாதிபதி பொது வேற்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிப்பவருமான எம். கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன கோமரங்கடவல பிரதேச சபை உறுப்பனர் சந்தன கேமந்த என்பவரைத் பிரதேச செயலகத்திற்கு முன்னால் பொது மக்கள் முன்னிலையில் வைத்து தாக்கிக் காயப்படுத்தியதாக கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு தாக்கப்பட்டவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில் இன்று புதன்கிழமை திருகோணமலை பதில் நீதிமன்ற நீதிவான் திரு.தி.செந்தில்நாதன் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது குற்றம் சாட்டப்பட்ட முன்னால் பிரதி அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னால் பிரதி அமைச்சரைக் கைது செய்து எதிர் வரும் 31 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோமரங்கடவல பொலிஸாருக்கு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

Post a Comment