Header Ads



அரச தர்மம் நெறிபுரளும் போது, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் - மைத்திரிபால சிறிசேன


அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பலியான மற்றும் பாதிப்புக்கு உள்ளான அனைவருக்காகவும் தாம் வருத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி ஹினிதுமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.

இன்று என்றும் இல்லாத வகையில் பாரிய மழையுடனான வெள்ளப்பெருக்கு என்பன ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் என்ன? அரச தர்மம் நெறிபுரளும் போது இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்.

இந்த நிலையில் நாங்கள் புதிய அரசாங்கத்தில் மக்களின் வறுமையை ஒழிக்க முன்னுரிமை வழங்குவோம்.

No comments

Powered by Blogger.