Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு ரவூப் ஹக்கீமின் சவால்...!

தங்களது 'ஜப்னா முஸ்லிம்' இணையத்தளத்தில் 'சீறிப் பாய்ந்த மஹிந்த...! அடிபணிந்தாரா ரவூப் ஹக்கீம்...?' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி திரிபுபடுத்தப்பட்டதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார். 

தனக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் திங்கள்கிழமை (08-12-2014) காலையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் அமைச்சரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடுமாறும் அமைச்சர் ஹக்கீம் கூறுகிறார். 

சம்பிரதாயத்திற்காக ஜனாதிபதியை வாழ்த்துவதற்கு தாம் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அப்பொழுது ஜனாதிபதி அதற்கு நன்றி தெரிவித்து தம்முடன் சுமுகமாக உரையாடியதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவிக்கின்றார். 

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஜனாதிபதி தம்மீது சீறிப்பாய்ந்திருந்தால், அதே பாணியில் தாமும் சீறிப்பாய்ந்திருப்பார் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார். அவ்வாறான சில சம்பவங்கள் முன்னர் அமைச்சரவை கூட்டம் உட்பட இடம்பெற்றிருந்ததாகவும் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகின்றார். 

அந்தச் செய்தியில் தொடர்ந்து கூறப்பட்டுள்ள தகவல்களைப் பார்க்கும் போது காழ்ப்புணர்ச்சியினால் உந்தப்பட்ட முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இந்த அபாண்டத்தை தங்கள் இணையத்தினூடாக வெளிப்படுத்தியுள்ளதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வர் என்றும் அமைச்சர் தெரிவிப்பதோடு, ஊடக தர்மத்தை அனுசரித்து மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் இவ்வாறான விடயங்களை கையாளுமாறும் இணையத்தளங்களை வேண்டிக்கொள்கிறார். 

இந்தச் செய்தியை முழுமையாகவும், நேர்மையாகவும் வெளியிடுமாறு தங்கள் இணையத்தளத்திற்கு அறிவிக்குமாறு அமைச்சர் ஹக்கீம் என்னிடம் கூறினார். 

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

மிகமுக்கிய குறிப்பு

நாம் வெளியிட்ட செய்தியில் ஆளும்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இத்தகவலை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டதாக மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். http://www.jaffnamuslim.com/2014/12/blog-post_904.html  எமக்கு தகவல் வழங்குபவரை பாதுகாப்பது ஊடகங்களின் தலையாய கடமையாகும். அது எவராக இருந்தாலும் பரவாயில்லை.

நாளை ரவூப் ஹக்கீமே வந்து, ஒரு தகவலை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் வழங்கிவிட்டு, குறித்த செய்தியில் எனது பெயரை பாவிக்க வேண்டாமென குறிப்பிட்டால், எமது உயிரே போனாலும் ரவூப் ஹக்கீமை நாம் ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டோம்.

இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் ரவூப் ஹக்கீம் எம்முடன் சில செய்திகளை பகிர்ந்துகொண்டுள்ளார். இதன்போது தன்னுடைய பெயரை பாவிக்க வேண்டாமென, ஹக்கீம் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டியதற்கிணங்க, ஹக்கீமுடைய பெயரை பயன்படுத்தாமலே நாம் செய்திகளை பதிவேற்றம் செய்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

12 comments:

  1. I am really happy that at least Hakeem has rebuffed this news item, when you are with MUNAFIQUES, you have to expect such things

    ReplyDelete
  2. ரவூப் ஹக்கீம் யாருக்கு கதை சொல்லி தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கின்றார்???

    ஜனாதிபதி சீறிப் பாய்ந்திருந்தால் தானும் அதே பாணியில் சீறிப் பாய்ந்து இருப்பாராம், ஹீ ஹீ ஹீ ....... நம்புறமாதிரி ஏதாவது பொய் சொலுங்க.

    கோத்தபாயவை சந்தித்த பொழுது பூனை மாதரி பதுங்கி நடுங்கிக் கொண்டு இருந்த கதை எங்களுக்கும் தெரியும்.

    ReplyDelete
  3. Jaffna muslim has been clearly against and unfair towards the current ministers. Jaffna muslim news failed to verify above news item before publishing. What if this information is a total lie from the source? I am not a supporter of minister Hakeem or SLMC or Rishard Badiuddin but the way they handled incidence like Aluthgama violence has to be appreciated. Remember, Jaffna muslim news was really advocating their resgnation but they did the right thing by not taking a foolish emotional step to resign. The incidence was internationalised very effectively by being ministers and stopped from spreading to other areas. One can not do it by sitting with the opposition. Non of the current muslim MPs in opposotion do anything during Aluthgama incidence because they can not do anything effectively from opposition.

    ReplyDelete
  4. O you who have believed, if there comes to you a disobedient one with information, investigate, lest you harm a people out of ignorance and become, over what you have done, regretful. (Al-Qur'an)

    ReplyDelete
  5. this is the time to see who is love our nation
    who is love money and power.january 9th allah will show
    1,who have good intention group they will WIN
    2,who have bad intention group they will DEFEAT
    BY ALLAH,INSHA ALLAH

    ReplyDelete
  6. சீறி பாய்ந்திருப்பார் கண்ணாடி முன்னாடி நின்னு

    ReplyDelete
  7. Thanks reaction, i am also with you, we should thing about the situation, because any how our Majority Muslims will vote for MS and as Muslim leaders they should think and take the decision very analytical way, Every body forgot who forced get the decision to join with Government (Harees etc) now they forcing to take another quick emotional decision please allow them to analyze the situation and take the proper decision, whoever won the election their are racist in both side (JHU,BBS) AND WE ARE NOT READY TO BELIEVE ANY BODY OTHER THEN ALLAH

    ReplyDelete
  8. பள்ளிவாசல்கள்
    தகர்க்கப்பட்ட் போது
    சீறிப்பாயத் தெரியாதவர்
    தர்கா டவுன் பற்றி
    எரிந்தபோது
    சீறிப்பாயத் தெரியாதவர்
    ஹலால் சான்றிதழ்
    பறிக்கப்பட்டபோது
    சீறிப்பாயத் தெரியாதவர்
    பெண்களின் புர்காவை
    அசிங்கப்படுத்திய போது
    சீறிப்பாயத் தெரியாதவர்
    அல்குரானை
    இழிவு படுத்தியபோது
    சீறிப் பாயத் தெரியதவர்
    முஸ்லிம்களின்
    வர்த்தக நிலையங்கள்
    தாக்கப்பட்ட போது
    சீறிப் பாயத் தெரியாதவர்
    கிழக்கு மாகாணசபை
    மறுக்கப்பட்டபோது
    சீறிப் பாயத் தெரியாதவர்
    இப்போது மட்டும்
    சீறிப் பாயப் போகிறாராம்.
    இந்த ஆண்டின்
    மிகச் சிறந்த நகைச்சுவை.

    ReplyDelete
  9. தயவு செய்து முஸ்லிம் காங்கிரஸ் அல்லது ஹகீமின்
    செய்திகலை ஜப்னா முஸ்லிமில் பிரசுரிக்க வேண்டாம்.
    நமது நேரத்தை வீன் அடிக்க விரும்பவில்லை.

    ReplyDelete
  10. இந்த செய்தி இவ்வினையத்தளத்தில் மட்டுமே பதிவிட்டு இருந்தால் இது பக்கச் சார்பான செய்தி என சொல்லலாம்...
    ஆனால் இன்னும் பல இனையத் தளங்களில் இதே செய்தி பதிவிப்பட்டதை பார்த்தேன்...
    சமூகத்தை விற்று பொய்யான அரசியல் தலைவர்களுக்கு உண்மை வெளியே வரும் போது வலிக்கத்தான் செய்யும்

    ReplyDelete
  11. இந்தால் சீறிப்பாய்ந்த சம்பவங்களை ஜப்னா முஸ்லிம் ஏனோ மறைத்து விட்டது.?

    இவருடைய சீற்றத்தை காண நாமும் பெரும் ஆவலாய் உள்ளோம். எங்கே ஒரு முறை மீண்டும் சீறிப்பயுங்கள் மாண்புமிகு நீதியில்லா அமைசர் அவர்களே!

    அசாட் சாலிக்கு நடந்ததே தனக்கும் நடக்கும் என சொன்னவர் அப்போது சீறிப்பாய்ந்துதான் சொல்லியிருக்கிறார், நாம்தான் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    பேருவலை,அலுத்கமவைக்கு சென்று,அழுது...என் சமுகத்தை என்னாலே பாதுகாக்க முடியாமல் போனதை இட்டு வெட்கப்படுகிறேன் என சொன்னதும் சீறிப்பாய்ந்துதான் என்பதை நாம் ஏனோ மறந்து விட்டோம்.

    சும்மா இல்லை, இவர் இல்யாஸ் அபூபக்கர் சொன்னதுபோன்று, கண்ணாடி முன் நின்று சரமாரியாக சீறிப்பாய்ந்திருப்பார். இனிமேலும் இந்த மனிதனின் செய்திகள் வெளிவந்தால் மிக கடுமையாக அவதானமாக உன்னிப்பாக அவதானியுங்கள்...நிச்சயம் அவர் சீறியே பாய்வார்.

    சீறிப்பாய்ந்து பொதுமக்களில் விழாமல் இருந்தால் சரிதான் தாத்தா.

    நல்ல ஜோக் என்பது இதைதான்.

    ReplyDelete
  12. அல்லாஹ் வின் பயம் குறையும் பொது அவனின் படைப்புகளுக்கு பயப்பட வேண்டியுள்ளது

    ReplyDelete

Powered by Blogger.