மற்றுமொரு திருமணத்திற்கு ரெடியாகும் ஜனாதிபதி..?
தென்னாப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, 72, ஐந்தாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்து தன் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஆப்ரிக்க பழங்குடிகளிடையே பலதார தடைச்சட்டம் இல்லை என்றாலும், கடந்த ஜூன் மாதம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு, மேலும் ஒரு திருமணமா என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். ஆனாலும், டர்பன் நகரில் அதிபர் அறிவிப்பின்போது, அவரை சுற்றியிருந்தவர்கள் (பெரும்பாலும் முதியவர்கள்) ஆற்றாமை கலந்த வெட்கத்துடன் சிரித்ததாக, 'தி ஸ்டார்' பத்திரிகை தெரிவித்துஉள்ளது.
ஜேக்கப் ஜூமா ஆறுமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரது மனைவிகளை மகிழ்விக்க, அரசு பணத்தை செலவழிக்க வேண்டுமா என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதையடுத்து, நான்கு பேரை மட்டுமே, தன் அதிகாரப்பூர்வ மனைவிகளாக அரசுக்கு கணக்கு காட்டியுள்ளார் ஜூமா. முதுமையில், துணைக்கு ஒரு மனைவி தேவை என, கூறியதில், தவறு இல்லை. ஏதாவது ஒரு மனைவியின் இளம் தங்கையை திருமணம் செய்து கொள்ள தடையில்லை என்பது பழங்குடிகளின் கொள்கை.

Post a Comment